நித்தியானந்தாவிற்கு என்ன ஆச்சு.? உயிரிழந்து விட்டாரா.!! ஆசிரம நிர்வாகி பகீர் தகவல்

நித்தியானந்தா இறந்துவிட்டதாக அவரது சித்தியின் மகன் தெரிவித்துள்ளார். ஆனால், இது வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர் போடும் நாடகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

What is the health condition of Kailasha Samiyar Nithyananda KAK

Health condition of Samiyar Nithyananda : நித்தியானந்தா என்ற பெயரை தெரியாத தமிழக மக்கள் இருந்ததில்லை, திருவண்ணாமலை. பெங்களூர் என ஆயிரக்கணக்கான இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி ஆன்மிக சொற்பொழிவாற்றியவர், இது மட்டுமல்ல பல்வேறு சர்சைகளிலும் சிக்கினார். நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ தான் இவரை நாடு முழுவதும் பிரபலப்படுத்தியது. மேலும் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

What is the health condition of Kailasha Samiyar Nithyananda KAK

பாலியல் குற்றச்சாட்டில் நித்தியானந்தா

பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கிய நித்யானந்தாவின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஒரு கட்டத்தில் மதுரை ஆதினம் தான் தான் என முடி சூடிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவர் தான் நித்யானந்தா.

மேலும் நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது திடீரென தலைமறைவான அவர், கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு தான் தான் அதிபர் என கூறினார்.


கைலாசா நாட்டை உருவாக்கிய நித்தியானந்தா

அந்தநாட்டிற்கான பணம், கொடி, ஸ்டாம்ப் என அடுத்தடுத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.  ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார். இதனிடையே கடந்த ஆண்டு  நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு என்றும், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார் எனவும் பல்வேறு தகவல்கள் பரவியது.

சுயநினைவின்றி இருப்பதாகவும் அவர் மெலிந்த உடலோடு புகைப்படமும் வெளியானது. ஆனால் அடுத்த சில மாதங்களிலையே மீண்டும் பக்தர்கள் முன்பு தோன்றி ஆசி வழங்கினார். தற்போது மீண்டும் நித்யானந்தா தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

நித்தியானந்தாவிற்கு என்ன ஆச்சு.?

அதன் படி கடந்த சில மாதங்களாக வீடியோ வெளியிடாமல் இருந்து வந்த நித்யானந்தாவிற்கு என்ன ஆச்சு என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் நித்தியானந்தாவின் சித்தியின் மகன் சுந்தேரேஷ்வரன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பக்தர்களுடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், 20 வருடங்களுக்கு மேலாக ஆன்மிக பணியில் நித்யானந்நா ஈடுபட்டு வரும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புதல், தாக்குதல் சம்பவங்கள் அர்ங்கேறியது. ஆனால் இதற்கு எதற்குமே தயங்காமல் நீதி என்னவோ.? தர்மம் என்னவோ.?

Nithyananda

உயிரிழந்து விட்டாரா நித்தியானந்தா.?

நியாயம் என்னோவோ அதற்க்காகத்தான் நிற்பேன் எனகூறினார். எது வந்தாலும் பார்த்துக்கலாம் என நின்று சுவாமிஜி தனது உயிரை தியாகம் செய்துள்ளார். இன்று இந்து தர்மம் என்பது சுவாமி ஜி போட்ட தியாகம் தான் காரணம் என கூறினார். 

நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக கூறி வரும் நிலையில், தனது மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இது போன்ற நாடகங்களை நித்தியானந்தா அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.

4.8 லட்சம் ஹெக்டேர் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு

இந்த நிலையில் தான் நித்தியானந்தா தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பழங்குடியினரின் 4.8 லட்சம் ஹெக்டேர் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புதிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இதனால் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தில் இறந்து விட்டதாக நாடகம் ஆடுவதாக கூறப்படுகிறது. இருந்த போதும் கைலாசா நாட்டில் இருந்து நித்யானந்தாவின் உடல் நிலை தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வரவில்லை. 

Latest Videos

vuukle one pixel image
click me!