இலங்கை செல்லும் மோடி.! அதிரடியாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்!!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்.

Resolution passed in the Legislative Assembly regarding the arrest of fishermen and the Katchatheevu issue KAK

Resolution in the Tamil Nadu Legislative Assembly  : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நிகழ்வானது தினமும் தொடர்ந்து கொண்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு பல மாதங்கள் சிறையில் தவிக்கும் நிலையும் உள்ளது. அவ்வப்போது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலில் மீனவர்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை கட்டுப்படுத்தக்கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி நாளை மறுதினம் இலங்கை சென்று அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். 

Resolution passed in the Legislative Assembly regarding the arrest of fishermen and the Katchatheevu issue KAK

Latest Videos

கச்சத்தீவு- தனித்தீர்மானம்

இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.  முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்கள்தான் என்பதை ஒன்றிய அரசு அடிக்கடி மறந்துவிடுகிற காரணத்தால், நாம் மீண்டும் மீண்டும் அவர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் என்று அழுத்தமாகச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.  ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் ஒரு மீனவர்கூட கைது செய்யப்படமாட்டார் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக  நரேந்திர மோடி அவர்கள் சொன்னார்கள். ஆனாலும், இந்தத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  

ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்க் கைது

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 530 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அமைச்சர் சொன்ன கணக்குப்படி பார்த்தால், ஒரு நாளைக்கு இரண்டு மீனவர்களை கைது செய்துள்ளார்கள். எல்லைதாண்டி வந்தார்கள் என்று சொல்லி  அவர்களுக்கு அதிகபட்ச சிறை தண்டனை விதிக்கப்படுகிறது அல்லது அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுகிறது.   கச்சத்தீவு விவகாரத்தைப்  பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது.  ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. 

 கச்சத்தீவு- எதிர்த்த கருணாநிதி

கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.  தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்.  கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது 2.7.2024 தேதியிட்ட கடிதம் மூலம் கச்சத்தீவு பிரச்சினையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையையும் வலியுறுத்தியிருக்கிறேன். 

இலங்கை செல்லும் பிரதமர் மோடி

ஆனால், இன்றுவரை மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய பா.ஜ.க. அரசு கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை நான் வேதனையுடன் இங்கே குறிப்பிடுகிறேன். ஆகவே,  விரைவில் இலங்கை செல்லும் பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றம் விரும்புகிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தை இப்போது நான் முன்மொழிகிறேன் என தெரிவித்தார். 

தீர்மானம்

“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.   இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும்,

அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும்  இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துவதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

vuukle one pixel image
click me!