ஜோஸ் பட்லர் அபாரம்
RCB vs GT IPL 2025: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் குஜராத் அணி பெங்களூருவை வீழ்த்தியது. ஜோஸ் பட்லர், சிராஜ், சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடினர்.
சாய் சுதர்சன்:
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி 170 ரன்கள் இலக்குடன் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
RCB vs GT IPL Liam Livingstone
அதிரடி காட்டிய லியாம் லிவிங்ஸ்டன்
ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 54 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33, டிம் டேவிட் 32 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். குஜராத் அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசினார்.
சிராஜ் 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
முகமது சிராஜ் சிறப்பான பந்து வீச்சு
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைத்தது. சுப்மன் கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடினர். டாப் ஆர்டர் வீரர்கள் குஜராத்துக்கு வெற்றியை தேடித் தந்தனர்.
தொடக்க வீரர் சாய் சுதர்சன் மீண்டும் ஒருமுறை சிறப்பாக விளையாடினார். அவர் 49 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் அடங்கும்.
குஜராத் டைட்டன்ஸ் சிறப்பான வெற்றி:
ஜோஸ் பட்லர், ரூதர்ஃபோர்ட் ஆகியோர் குஜராத்துக்கு வெற்றியை தேடித் தந்தனர். ஜோஸ் பட்லர் 39 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும். ரூதர்ஃபோர்ட் 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆர்சிபி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது.