சொந்த மண்ணில் ஏமாற்றிய கோலி; ஆட்டம் காட்டிய சின்ன புரூஸ்லி லிவிங்ஸ்டன்: ஆர்சிபி 169/8 ரன்கள் குவிப்பு!

IPL 2025, RCB vs GT: இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் சொதப்பினாலும் மிடில் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் கை கொடுக்கவே ஆர்சிபி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

RCB vs GT, IPL 2025 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு எதிராக எம் சின்னசாமி மைதானத்தில் தற்போது நடைபெறு வரும் போட்டியில் 169/8 ரன்களை எட்டியது.

முகமது சிராஜ்

முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சால் ஆர்சிபி அணி 42/4 என தடுமாறியது. லிவிங்ஸ்டோன் அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தார். அவருக்கு ஜிதேஷ் சர்மா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் பக்கபலமாக இருந்தனர்.


டாஸ் வென்ற குஜராத் பவுலிங்

டாஸ் வென்று முதலில் பந்துவீச குஜராத் அணி முடிவு செய்தது. அதன்படி ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பில் சால்ட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தவறவிட்டார். பின்னர் விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அர்ஷத் கான் அவரது விக்கெட் எடுத்தார். முகமது சிராஜுக்கு எதிராக விராட் அடித்த பவுண்டரி மட்டுமே ஆறுதல் அளித்தது. ஆர்சிபி 1.4 ஓவர்களில் 8/1 என இருந்தது.

ஃபில் சால்ட் சொதப்பல், ஐபிஎல் 2025

ஃபில் சால்ட் சின்னசாமி மைதானத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடவில்லை. தேவ்தத் படிக்கல் ஒரு பவுண்டரி அடித்தாலும், சிராஜ் பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஆர்சிபி 2.2 ஓவர்களில் 13/2 என இருந்தது.

சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் இன்னிங்ஸை கட்டியெழுப்ப முயன்றனர். சிராஜின் பந்துவீச்சில் சால்ட் ஒரு சிக்ஸர் அடித்தார். இருப்பினும், சிராஜ் தனது அனுபவத்தால் சால்ட்டை 14 ரன்களில் வெளியேற்றினார். ஆர்சிபி 4.4 ஓவர்களில் 35/3 என தடுமாறியது.

ஆர்சிபி 38/3 ரன்கள்

பவர்ப்ளேயின் முடிவில், ஆர்சிபி 38/3 ரன்கள் எடுத்திருந்தது. படிதாருடன் (8*) லியாம் லிவிங்ஸ்டன் (0*) இணைந்தார். இஷாந்த் சர்மா கேப்டன் படிதாரை 12 ரன்களில் எல்பிடபிள்யூ ஆக்கினார். ஆர்சிபி 6.2 ஓவர்களில் 42/4 என இருந்தது.

லியாம் லிவிங்ஸ்டன் - ஜித்தேஷ் சர்மா

லியாமுடன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆர்சிபி 8.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. ஜிதேஷ் சர்மா இஷாந்த் சர்மா வீசிய ஒன்பதாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அணியின் அழுத்தத்தை குறைத்தார். அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 10 ஓவர்கள் முடிவில் 73/4 ரன்கள் எடுத்திருந்தது. ஜிதேஷ் (23 *) மற்றும் லியாம் (8 *) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜித்தேஷ் சர்மா

ஜித்தேஷ் சர்மா அடித்த பந்து ராகுல் திவேதியாவிடம் கேட்ச் ஆனது. ஜிதேஷ் 20 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஆர்சிபி 12.4 ஓவர்களில் 94/5 என இருந்தது. சாய் கிஷோர் தனது முதல் விக்கெட்டை எடுத்தார். குருணல் பாண்டியாவின் பவுண்டரி மூலம் ஆர்சிபி 14 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கிஷோர் தனது இரண்டாவது விக்கெட்டை குருணல் மூலம் பெற்றார். ஆர்சிபி 14.2 ஓவர்களில் 104/6 என இருந்தது. டிம் டேவிட் களத்திற்கு வந்து ரஷித் கான் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். 16வது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

ஆர்சிபி 169/8 ரன்கள் குவிப்பு!

லிவிங்ஸ்டன் மறுமுனையில் சிக்ஸர்கள் அடித்து ஆடினார். ரஷித் வீசிய 18வது ஓவரில் லிவிங்ஸ்டோன் மூன்று சிக்ஸர்கள் உட்பட 20 ரன்கள் எடுத்தார். 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடங்கும். ஆர்சிபி 18.1 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. லிவிங்ஸ்டன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். சிராஜ் தனது மூன்றாவது விக்கெட்டை எடுத்தார். ஆர்சிபி 18.2 ஓவர்களில் 150/7 என இருந்தது.

ஆர்சிபி 20 ஓவர்களில் 169/8 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா அவருக்கு விக்கெட் எடுத்தார். சிராஜ் (3/19) நான்கு ஓவர்களில் சிறப்பாக பந்துவீசினார். சாய் கிஷோர் (2/22) மற்றும் பிரசித் (1/26) ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர்.

Latest Videos

click me!