விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் லாரி ஓட்டுநர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் நிலையில், எம்.புதூர் பகுதியில் வாகனங்களை மறித்து மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபடுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தன.
லாரி ஓட்டுநரை தாக்கி வழிப்பறி
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.புதூர், ஆணையம்பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் லாரி ஒட்டுநர்களை வழிமறித்து தாக்கி பின்னர் அவர்களிடம் இருந்த பணம் செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் வழிபறியில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த விஜய்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை லவ் பண்ணுவியா! தங்கையை ஆணவக்கொலை செய்த அண்ணன்! சிக்கியது எப்படி?
என்கவுண்டரில் சுட்டுக்கொலை
இதனையடுத்து கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற விஜய் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் தப்பி ஓடும் போது என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். போலீசார் என்கவுண்ட்டர் செய்த பிரபல ரவுடி விஜய் மீது புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொலை முயற்சி, வழிபறி உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் அடுத்தடுத்து என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.