MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை லவ் பண்ணுவியா! தங்கையை ஆணவக்கொலை செய்த அண்ணன்! சிக்கியது எப்படி?

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை லவ் பண்ணுவியா! தங்கையை ஆணவக்கொலை செய்த அண்ணன்! சிக்கியது எப்படி?

திருப்பூரில் வேறு சமூகத்தை சேர்ந்த காதலனை காதலித்ததால், அண்ணனே தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 02 2025, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த வித்யா

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த வித்யா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி.  இவர் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இந்த தம்பதிக்கு வித்யா என்ற மகளும்,  சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவை அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருப்பூரை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞருடன் வித்யா காதலித்து வந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
யாருக்கும் தெரியாமல் புதைத்த பெற்றோர்

யாருக்கும் தெரியாமல் புதைத்த பெற்றோர்

இந்நிலையில் கடந்த 30ம் தேதி வித்யாவின் பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். அவரது அண்ணன் வெளியில் சென்ற நிலையில் வித்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது வித்யாவின் மீது பீரோ சரிந்து விழுந்து ரத்த வௌ்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் வீட்டு அருகே உள்ள மயானத்தில் வித்யாவின் உடலை புதைத்து விட்டனர்.

இதையும் படிங்க: பொட்டு வைத்து கயிறு கட்டுவது சங்கிகளின் அடையாளம்! அதை திமுககாரர்கள் செய்யாதீங்க! ஆ.ராசா சர்ச்சை பேச்சு!

34
பிரேத பரிசோதனை அதிர்ச்சி

பிரேத பரிசோதனை அதிர்ச்சி

இதனால் சந்தேகமடைந்த காதலன் வெண்மணி காதலி இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வித்யாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டு எடுக்கப்பட்டு பல்லடம் தாசில்தார், டிஎஸ்பி முன்னிலையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் வித்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது தெரியவந்தது. 

44
ஆணவ கொலை

ஆணவ கொலை

இதை தொடர்ந்து வித்யாவின் தந்தை தண்டபாணி (53), அண்ணன் சரவணகுமார் (24), காதலன் வெண்மணி மற்றும் வித்யாவின் உடலை புதைத்த உறவினர்கள் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் அண்ணன் சரவணகுமார், தங்கை வித்யாவை ஆணவ கொலை செய்தது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலித்ததால், தனது தங்கை வித்யாவை தான் இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக போலீசாரிடம் சரவணண் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
குற்றம்
தமிழ்நாடு
காவல்
கௌரவக் கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved