இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பை இந்தியாவில் நடப்பது இந்திய அணிக்கு பலம். 2011ம் ஆண்டுக்கு பின் உலக கோப்பை இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி மீண்டும் இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புள்ளது. 2019ம் ஆண்டு கேப்டனாக இருந்த யாருமே அந்தந்த அணிகளுக்கு இப்போது கேப்டனாக இல்லை. 2023ம் ஆண்டு உலக கோப்பையில் அனைத்து அணிகளும் புதிய கேப்டனின் கீழ் ஆடுகின்றன. 2019 மற்றும் 2023 உலக கோப்பைகளில் அனைத்து அணிகளின் கேப்டன்களை பார்ப்போம்.