IPL 2023: 5 சிக்ஸர்கள் அடித்த ரிங்கு சிங் ஆரம்பத்தில் துப்புரவு தொழிலாளி வேலை பார்த்தவர்!

First Published | Apr 10, 2023, 12:22 PM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ரிங்கு சிங் வெற்றி பெற செய்தார்.

ரிங்கு சிங்

கடந்த 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர் ரிங்கு சிங். இவரது தந்தை கான்சந்த் சிங் லக்னோவில் உள்ள கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் போடும் வேலை பார்த்து வந்தார். இவ்வளவு ஏன் ரிங்கு சிங், கூட துப்புரவு தொழிலாளராக பணியாற்றியிருக்கிறார்.

ரிங்கு சிங்

இருப்பினும், கிரிக்கெட்டில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி அவரிடம் இருந்துள்ளது. அதோடு, கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப கடுமையாக உழைத்தார். 

Tap to resize

ரிங்கு சிங்

இந்த நிலையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரூ.80 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஐபிஎல் வருமானத்தின் மூலமாக தனது குடும்பத்திற்கு அழகான வீட்டை கட்டினார். 

ரிங்கு சிங்

என்னதான் கேகேஆர் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

ரிங்கு சிங்

பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு சீசன் மூலமாக திரும்ப வந்தார். அப்போது ரூ.55 லட்சத்திற்கு தான் அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனிலும் ரூ.55 லட்சத்திற்கு தான் அவர் அணியில் இடம் பெற்றிருக்கிறார். 

ரிங்கு சிங்

இதுவரையில் 20 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 349 ரன்கள் அடித்துள்ளார். இதில், 26 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட்டில் தற்போது வரையில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்ல. அவரது அதிகபட்ச ஸ்கோரே 48 (நாட் அவுட்) தான் என்பது கு.றிப்பிடத்தக்கது

Latest Videos

click me!