ஒரே பாலினத்தவருடன் உறவில் ஈடுபடுவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்.??

First Published Mar 19, 2023, 6:06 PM IST

செக்ஸ் பற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கனவுகள் இருக்கும். உண்மையில், அந்தந்த கனவுகளுக்கு ஒவ்வொரு அர்த்தம் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

சிலருக்கு காதல் பற்றி அடிக்கடி கனவுகள் வரும். பாலியல் கனவுகள் கூட பலருக்கு பொதுவான நிகழ்வாகும். சில கனவுகள் மகிழ்ச்சியாகவும் மற்றவை ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கும். செக்ஸ் பற்றிய கனவுகளின் அர்த்தம் பலருக்குத் தெரியாது. செக்ஸ் பற்றி என்ன மாதிரியான கனவுகள் பொதுவாக ஏற்படுகின்றன? அதற்குரிய அர்த்தம் என்ன? என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஒரே பாலினத்தவருடன் உடனான உடலுறவு

ஒரே பாலினத்தவருடன் உடலுறவு கொள்வதைக் கனவு காண்பது, நீங்கள் அத்தகைய பாலினத்தை விரும்புகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. இத்தனை நாள் தாம்பத்திய உறவை நிறுத்திவிட்ட ஆசையின் அடையாளமாகக் கூட அது இருக்கலாம். இந்த கனவுகள் நீங்கள் ஒரே பாலினத்தில் ஈர்க்கப்படுவதைக் குறிக்கலாம். ஆனால் நீங்கள் அதைப் பற்றி அறியாமல் இருக்கலாம் அல்லது இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்.
 

முன்னாள் துணையுடன் உடலுறவு

உங்களுக்கு முன்னாள் துணையுடன் உடலுறவு பற்றி கனவு காண்பது உங்களுக்கு தீர்க்கப்படாத உணர்ச்சிகள் அல்லது அவர்களுடன் தீர்க்கப்படாத மோதல்கள் இருப்பதைக் குறிக்கிறது. முடிந்து போன கடந்த காலத்தை மறைக்க நீங்கள் வழி தேடுவது இதற்கு நல்ல தீர்வாக அமையும்.

பிரபலத்துடன் உடலுறவு

ஒரு பிரபலத்துடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற கனவு இன்றைய காலத்தில் பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. அந்த பிரபலத்துடன் தொடர்புடைய சில குணங்கள் உங்களிடம் இருப்பதால் கனவுகள் ஏற்படுகிறது. உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த கனவை நீங்கள் விரும்பலாம். ஒருவேளை விச்சித்திரமாக தோன்றினால் வேறு வேலை பாருங்கள். கனவு கலைந்துவிடும். 
 

கூட்டு பாலியல் உறவு

பல கூட்டாளர்களுடன் செக்ஸ் பற்றிய கனவுகளுக்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் ஒரு நபருக்கு ஒப்புக்கொள்ள பயப்படலாம். அல்லது உங்கள் வாழ்க்கையில் அதிக உற்சாகத்தைக் காண விரும்பலாம். இந்த செக்ஸ் கனவு நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்னைகள் இருக்கிறது என்பதை குறிக்கிறது.

கணவன்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 4 விஷயங்கள்..!!

பொது இடத்தில் உடலுறவு கொள்வது

பொது இடத்தில் உடலுறவு கொள்வதைக் கனவு காண்பது உங்கள் பாலுணர்வை வெளிப்படையாக வெளிப்படுத்த அல்லது உங்கள் பாலியல் வாழ்க்கையில் அதிக நம்பிக்கையுடன் இருக்க விரும்புவதைக் குறிக்கிறது. இது கவனம் அல்லது உற்சாகத்தையும் குறிக்கலாம். அத்தகைய கனவுகளை விட நீங்கள் சாகசங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சாத்தியமாகும்.
 

click me!