மகிழ்ச்சியா இல்லையா? லீவு எடுத்துக்கோங்க... ஊழியர்களுக்கு ராஜ மரியாதை கொடுக்கும் நிறுவனம்!

By SG BalanFirst Published Apr 29, 2024, 6:24 PM IST
Highlights

யூ டாங் லாய் நீண்ட நேரம் வேலை செய்யவேண்டும் என்று வாதிடும் சீன நிறுவன முதலாளிகளுக்கு எதிராகக் குர ல் கொடுத்திருக்கிறார். “அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது சரியல்ல. அது மற்றவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பறிக்கும்” என யூ டாங் கூறினார்.

வேலை மற்றும் வாழ்க்கைக்கு இடையே சிறந்த சமநிலையை உறுதி செய்வதற்காக சீனாவின் சில்லறை வர்த்தக நிறுவனமான பாங் லாங் லாய் ஊழியர்களுக்கு வித்தியாசமான விடுமுறையை வழங்குகிறது. ஊழியர்கள் என்றாவது மகிழ்ச்சியாக இல்லை என்றால் அன்று வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று நிறுவனத்தின் அதிபர் யூ டாங் லாய் அறிவித்துள்ளார்.

மகிழ்ச்சியற்ற நாள் விடுப்பு என்ற வகையில் ஊழியர்கள் 10 நாட்கள் எடுக்கலாம் என அவர் கூறியுள்ளார். "எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இல்லாத நேரங்கள் ஏற்படும். எனவே மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம்" என்று அவர் யூ டாங் லாங் கூறுகிறார்.

ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை அவர்களே சுதந்திரமாக தீர்மானிக்கலாம் என்றும், இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது, மறுப்பது ஒரு மீறல் என்றும் யூ தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் மே மாதம் மீண்டும் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

பாங் டாங் லாய் நிறுவனத்தின் கொள்கைப்படி, பணியாளர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். வார இறுதி விடுமுறை தவிர, 30 முதல் 40 நாட்கள் வருடாந்திர விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். புத்தாண்டின்போது 5 நாட்கள் விடுமுறைக்கு உரிமை உண்டு.

“நாங்கள் பெரிதாக வளர வேண்டும் என்று விரும்பவில்லை. எங்கள் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றும் யூ டாங் லாய் கூறுகிறார். சுதந்திரமும் அன்பும் மிக முக்கியம் எனவும் தெரிவிக்கிறார்.

ஏற்கெனவே, யூ டாங் லாய் நீண்ட நேரம் வேலை செய்யவேண்டும் என்று வாதிடும் சீன நிறுவன முதலாளிகளுக்கு எதிராகக் குர ல் கொடுத்திருக்கிறார். “அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது சரியல்ல. அது மற்றவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பறிக்கும்” என யூ டாங் கூறினார்.

சீனாவில் 2021ஆம் ஆண்டு கவலைகளுடன் பணிகளைச் செய்வது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடந்தப்பட்டது. அதன்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என்று தெரியவந்தது.

மாட்டுத் தொழுவ பட்டத்துக்காரராகத் தேர்வான சிறுவன்! மாலை போட்டு மரியாதை செய்த ஊர்மக்கள்!

click me!