மியூச்சுவல் ஃபண்டில் 15-15-15 ஃபார்முலா மூலம் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்... எப்படி தெரியுமா?

By Ramya sFirst Published Apr 27, 2024, 3:34 PM IST
Highlights

ரூ. 1 கோடி சம்பாதிக்கும் இலக்கை அடைய, ஒரு முதலீட்டாளர் SIP மூலம் மாதம் ரூ.15000 முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது உங்கள் பணத்தை பெருக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. எனினும் சந்தையில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் இருப்பதால், குறுகிய கால மற்றும் நீண்டகால நிதி இலக்குகளை அடைய சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்று அறிந்தும் பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகின்ற்னர். 
சிறந்த முதலீட்டு ஃபார்முலாவில் ஒன்று 15x15x15 விதி. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், எதிர்காலத்தில் ரூ. 1 கோடி சம்பாதிப்பதை இலக்காகக் கொண்டால், இந்த விதி உங்கள் இலக்கை அடைய ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.

15-15-15 விதி என்றால் என்ன?

ரூ. 1 கோடி சம்பாதிக்கும் இலக்கை அடைய, ஒரு முதலீட்டாளர் SIP மூலம் மாதம் ரூ.15000 முதலீடு செய்ய வேண்டும். ஈக்விட்டி ஃபண்டிலிருந்து 15% ஆண்டு வருமானத்தை பெற முடியும் என்பதால், 15 ஆண்டுகளுக்கு SIP மூலம் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும் என்று விதி கூறுகிறது. அதாவது 15,000 முதலீடு, 15% வட்டி, 15 ஆண்டுகள் தான் 15-15-15 ஃபார்முலா. இந்த உத்தியை தொடர்ந்து கடைபிடிப்பது குறிப்பிடத்தக்க அளவு செல்வத்தை குவிக்கலாம்.  ஒருவர் தங்கள் SIP முதலீட்டில் சீராக இருந்தால் இந்த 1 கோடி என்ற இலக்கை எளிதாக அடையலாம்.

Personal Loan : பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? ஜாக்கிரதையா இருங்க.. சிரமங்களை சந்திக்க நேரலாம்..

15 ஆண்டுகளுக்கு முதலீடு

SIP-யில் 15 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ. 15,000 முதலீடு செய்தால், மொத்த மூலதனச் செலவு ரூ. 27,00,000 ஆகும். ஆண்டு வருமானம் 15% என்று வைத்துக் கொண்டால், நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ரூ.74,52,946 என மதிப்பிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் மொத்தம் ரூ. 1,01,52,946 பெறுவீர்கள். 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் கூட்டு சக்தி.. இதில் சிறிய தொகையை மாதந்தோறும் முதலீடு செய்தால், பின்னர் அது கூட்டு சக்தியின் மூலம் காலப்போக்கில் பெரிய தொகையாக வளரும். 

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா.. 17000 கிரெடிட் கார்டுகளை ப்ளாக் செய்த வங்கி.. ஏன் தெரியுமா?

முதலீட்டாளர்கள் ஒரு பரஸ்பர நிதி முறையான முதலீட்டுத் திட்டத்தை (SIP) தேர்வு செய்யலாம் அல்லது பல SIP திட்டங்களில் தங்கள் மூலதனத்தை ஒதுக்கலாம். மூலோபாய முதலீட்டுத் திட்டமிடல் ரூ. 1 கோடி திரட்டும் நோக்கத்தை அடைவதற்கு இன்றியமையாதது, ஈக்விட்டி,  கடன் மற்றும் ஹைபிரிடு போன்ற பல்வேறு வகைகளில் இருந்து பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் SIPகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பல வகைகளில் முதலீடு செய்ய முடியும், இது சந்தை ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. எனினும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.1 கோடி என்ற இலக்கை எட்டுவதற்கு, ஒரு தொழில்முறை நிதி மேலாளருடன் ஆலோசனை பெற்று பின்னர் முதலீடு செய்வது நல்லது..

click me!