Personal Loan : பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? ஜாக்கிரதையா இருங்க.. சிரமங்களை சந்திக்க நேரலாம்..

By Ramya s  |  First Published Apr 27, 2024, 8:52 AM IST

தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.


தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற பல தனிப்பட்ட செலவுகளுக்கு கையில் பணம் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு தோன்றும் ஒரே வழி வங்கியில் கடன் வாங்குவது. குறிப்பாக பெர்சனல் லோன் என்று அழைக்கப்படும் தனிநபர் கடனை வாங்கி பலரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். பின்னர் ஒவ்வொரு மாதம் இஎம்ஐ செலுத்தி தங்கள் கடனை அடைத்து வருகின்றனர். ஆனால் தனிநபர் கடனைப் பெறுவதற்கு முன், சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர், கிரெடிட் ஸ்கோர், வயது, வருமானம், தொழில், நிறுவனத்தின் சுயவிவரம் போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் சம்பளம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இருந்தால், வங்கி உங்களுக்கு தனிப்பட்ட கடன் வழங்கும். உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. 60 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொள்கின்றன. நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தகுதியுள்ளவரா இல்லையா என்பதை வங்கி சரிபார்க்கும். நீங்கள் குறைந்தது ஏதேனும் ஒரு நிறுவனத்தில் ஒரு வருடமாவது வேலை செய்திருக்க வேண்டும்., வங்கி உங்களுக்கு கடன் கொடுக்கும்.

Tap to resize

Latest Videos

உங்ககிட்ட கிரெடிட் கார்டு இருக்கா.. 17000 கிரெடிட் கார்டுகளை ப்ளாக் செய்த வங்கி.. ஏன் தெரியுமா?

தனிநபர் கடன் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள் : உங்கள் தேவையின் அடிப்படையில் தனிநபர் கடன் வாங்கினாலும், சில சமயங்களில் அதை எடுக்காமல் இருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, விடுமுறை நாட்கள், சுற்றுப்பயணங்கள், பங்குச் சந்தை அல்லது வணிகத்தில் முதலீடு செய்ய தனிநபர் கடனை நீங்கள் எடுக்கக்கூடாது.

உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் நீங்கள் கடன் பெற முடியாது என்று அர்த்தமல்ல. மேலும் நீங்கள் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் இருந்தாலும் தனிநபர் கடனைப் பெறலாம்.

கடன் வாங்குவதற்கு முன், நீங்கள் வட்டி விகிதத்தை சரியாக அறிந்து கொள்ள வேண்டும். குறைந்த வட்டி விகிதத்தில் வங்கியில் கடன் பெற விண்ணப்பிக்கவும். வங்கிக் கடன் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சேமிப்புக் அக்கவுண்ட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் தெரியுமா? மீறினால் அபராதமா?

வங்கி உங்களுக்கு கடன் கொடுக்கிறது என்று கடன் வாங்க வேண்டாம். உங்களுக்கு கடன் தேவையா இல்லையா என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை உறுதிப்படுத்தவும். கடனுக்கு அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை தேவை. அதுமட்டுமின்றி, இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளும் கேட்கப்படுகின்றன.

தனிநபர் கடனுக்கான தகுதி என்ன? : உங்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் வங்கி தகுதியை சரிபார்க்கும். குறைந்தபட்சம் 18 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் இருந்தால் மட்டுமே வங்கிக் கடன் வழங்கப்படும். ஒரு தனிநபருக்கு 750 அல்லது அதற்கு மேல் கிரெடிட் ஸ்கோரை வங்கி கட்டாயமாக்குகிறது.

முன்கூட்டியே செலுத்தும் தேர்வுகளைப் புரிந்துகொள்வது, தனிநபர் கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான முக்கியமான அம்சமாகும். எனவே உங்கள் உங்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படுகிறதா என்பதைப் பார்க்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைச் சரிபார்க்கவும். ஏனெனில் சில வங்கிகள் முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு அபராதம் விதிக்கின்றனர்.

click me!