பயன்படுத்தாத உங்கள் வங்கிக் கணக்கு.. Deactivate செய்யாவிட்டால் ஏதும் சிக்கல் வருமா? வல்லுநர்கள் சொல்வதென்ன?

By Ansgar R  |  First Published Apr 27, 2024, 2:05 PM IST

Unused Bank Accounts : நம்மில் பலர் சில நேரங்களில் வங்கி கணக்கை திறந்துவிட்டு அதை பயன்படுத்தாமலே பல காலம் அப்படியே விட்டுவிடுவோம். அப்படி கிளோஸ் செய்யப்படாத கணக்குகளால் ஏதேனும் சிக்கல் வருமா?


வங்கி கணக்கு இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்து மக்களிடமும் தங்களுக்கு என்று ஒரு வங்கி கணக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் பணி நிமித்தமாகவோ, அல்லது வேறு சில காரணங்களுக்காகவும் நாம் ஒன்றுக்கும் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை நமது பெயரில் துவங்குவது உண்டு. 

ஆனால் நாளடைவில் தேவைக்கு அதிகமாக, அல்லது அவசரத்திற்கு திறந்த வங்கி கணக்குகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அப்படி பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை இன்-ஆபரேட்டிவ் அல்லது டார்மண்ட் கணக்குகள் என்று அழைக்கின்றனர். இப்படி பயன்படுத்தப்படாமல் நமது வங்கி கணக்குகள் மூலம் சில அபாயங்களும் வரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Tap to resize

Latest Videos

Personal Loan : பெர்சனல் லோன் வாங்கப் போறீங்களா? ஜாக்கிரதையா இருங்க.. சிரமங்களை சந்திக்க நேரலாம்..

என்ன பிரச்சனை வரும்?

நிதி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு என்று வரும் பொழுது, முதலில் அங்கு பலிகடா ஆவது இந்த In-Operative மற்றும் Dormant கணக்குகள் தான். குறிப்பாக பண பரிமாற்ற மோசடிகள் நடக்கும் பொழுது மோசடிக்காரர்கள் இதுபோன்ற கணக்குகளை தான் ஹேக் செய்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் பண சலவை என்று கூறப்படும் Money Laundering, போதை பொருள் மற்றும் ஆட்கடத்தில் போன்ற விஷயங்களில் பண பரிவர்த்தனைக்கு இதுபோன்ற கணக்குகள் தான் பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கிறது அரசு. 

ஆகவே தாங்கள் பயன்படுத்தாத கணக்குகள் குறித்த விவரங்களையும் நாம் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறாக நடந்தால் உடனடியாக அது குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். காரணம், ஏதோ ஒரு அசம்பாவிதத்திற்கு நமது பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு உள்ளாகும்போது, போலீசார் நம்மிடமும் விசாரணை நடத்துவார்கள். 

ஆகவே பயன்பாட்டில் இல்லையே என்று அலட்சியம் காட்டாமல், வங்கியை அணுகி உரிய நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. இது பார்க்க சிறிய விஷயமாக இருந்தாலும், இதனால் ஏற்படும் பிரச்சனை பெரிதாக இருக்கும் என்பதை மறக்க கூடாது. 

Today Gold Rate in Chennai: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்! கிடுகிடுவென எகிறும் விலை! நகைப்பிரியர்கள் ஷாக்!

click me!