Abortion Tablet: கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக்கொள்ள போறீங்களா? யாருக்கு அவசியம்..யாருக்கு உயிருக்கு ஆபத்து?

First Published Jul 2, 2022, 10:41 AM IST

Abortion Tablet: கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

abortion

இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. இருப்பினும், உறவு வைத்து கொள்ள விரும்பி சிலருக்கு, கரு உண்டாகிறது. அவற்றை கலைக்க முற்படும் போது, பெரும்பாலான பெண்கள்  கருக்கலைப்பு மாத்திரைகள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆனால், கருக்கலைப்பு மாத்திரைகள் சில நேரம் நம்முடைய உயிருக்கே கூட ஆபத்தாக முடிகிறது. எனவே, கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். 

Abortion

கருக்கலைப்பு மாத்திரை யாருக்கு அவசியம்:

கருவை கலைத்திட கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து நூறு சதவீதம் உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது அவசியம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையானது, கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என்று உறுதியாக அறிந்து கொள்ள உதவுகிறது. 

மேலும் படிக்க .....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

abortion


அல்ட்ரா சவுண்ட்:

 நீங்கள் அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் எடுக்கும் போது, கரு கருப்பைக்கு வெளியே உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும்
சில நேரம் சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தாகவும் முடியும். 

மேலும் படிக்க .....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

அதேபோன்று , கடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில், கருக்கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற பின் விளைவுகள் இருக்கும். 

Abortion

அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எடுப்பது அவசியம் என்றால் அது எத்தனையாவது நாளில் எடுக்க வேண்டும் என்று பெரும்பாலானோருக்கு சந்தேகம் இருக்கும். வாருங்கள் அதனை பற்றி தெரிந்து கொள்வோம். 

கருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. ஒருவேளை, கருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது. அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, செய்தும் பயன் இல்லை. அதேபோன்று, கர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Abortion

இதில் முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால் கருவை கலைக்க முயலும் பெண்களுக்கு இணை நோய் உள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.  நாட்பட்ட அட்ரீனல் செயலிழப்பு, இரத்தசோகை, இருதய நோய் மற்றும் கட்டுப்படுத்தாத வலிப்பு குறைபாடு போன்ற உடல்நல பாதிப்பு இருப்போர் முதலில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 

மேலும் படிக்க .....Red Blood Cell: உடலில் இரத்த சிவப்பணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கணுமா? இந்த 5 ஊட்டச்சத்துக்கள் அவசியம்...

click me!