2024ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுககளில் திரூப்பூர் மாவட்டம் 97.54% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
2024ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகித்துடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திருப்பூரில் தேர்வு எழுதிய மாணவர்களில் 97.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூர் (97.25%), கோவை (96.97%) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
undefined
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அடிப்படையிலும் திருப்பூர் (95.75%) முதல் இடத்தில் உள்ளது. அரியலூர் (95.64%), ஈரோடு (95.63%), சிவகங்கை (95.56%), தூத்துக்குடி (94.13%) ஆகிய மாவட்டங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
TN 12th Result 2024: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் - முழு விவரம்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023ஆம் ஆண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.53% அதிகரித்துள்ளது.
தேர்ச்சி பெற்றவர்கள் இன்றுமுதல் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமாகவும் நேரில் கல்லூரிக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு துணைத்தேர்வு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. அந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இந்த ஆண்டே மேற்படிப்பைத் தொடரலாம்.