Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் தவறுதலாக கூட இவற்றை வாங்காதீர்கள்! துரதிஷ்டத்தை சந்திப்பீர்கள்!

First Published May 6, 2024, 9:52 AM IST

அட்சய திருதியை நாள் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இந்நாளில் எந்த ஒரு சுப காரியத்தைச் செய்தாலும், அதற்கான நித்திய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

இந்து மதத்தில் அட்சய திரிதியை மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, அட்சய திருதியை 10 மே 2024 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த நாள் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் திருமணத்தை குறிக்கிறது. அதுமட்டுமின்றி, சுப காரியங்களை தொடங்குவதற்கும் இந்த நாள் உகந்ததாக கருதப்படுகிறது. அட்சய திரிதியா என்றால் 'முடிவற்ற பலன்களைத் தருவது' என்று பொருள். 
ஆகையால், இந்நாளில் செய்யப்படும் அனைத்து மங்களகரமான செயல்களும் அட்சயமாகும், அதாவது எல்லையற்ற பலனைத் தரும் என்பது அர்த்தம்.

பரசுராமர் அட்சய திருதியை நாளில் தான் பிறந்தார். இந்த நாளில்தான் வேத வியாசர் மகாபாரதத்தை எழுதத் தொடங்கினாராம். மேலும், இந்த நாளில் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அட்சய திருதியை நாளில் ஷாப்பிங் செய்ய நினைத்தால், என்னென்ன பொருட்களை வாங்க கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

அலுமினிய பாத்திரங்கள்: அட்சய திருதியை நாளில் அலுமினிய பாத்திரங்கள் ஒருபோதும் வாங்க கூடாது. ஒருவேளை நீங்கள் அதை வாங்கினால், உங்களுக்கு பண நஷ்டம் ஏற்படும் மற்றும் அசுப பலன்கள் கிடைக்கத் தொடங்குவதாக கூறப்படுகிறது.

கருப்பு நிற ஆடைகள்: அட்சய திருதியை நாளில் கருப்பு நிற ஆடைகளை வாங்கக்கூடாது. ஏனெனில், கறுப்பு நிறம் எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தை அதிகமாகக் கொண்டுள்ளது. எனவே, அட்சய திருதியை நாள் மிகவும் பலனளிக்கும் நாளாகவும் கருதப்படுவதால், இந்நாளில் கருப்பு நிற ஆடைகளை அணியவோ அல்லது வாங்கவோ கூடாது.

கருப்பு நிற பொருட்கள்: அட்சய திருதியை நாளில் கருப்பு நிற பொருட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்கினால் பூர்வீக அசுப பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்துடன் கிரக தோஷங்களும் ஏற்பட ஆரம்பிக்கும்.

இதையும் படிங்க:  Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை உருவான கதை பற்றி தெரியுமா..? முழு விளக்கம் இதோ!

கூர்மையான பொருட்கள்: அட்சய திருதியை நாளில் கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம் இது ஒருவரது வாழ்க்கையில் வெற்றியை தடுக்கும்.

இதையும் படிங்க: Akshaya Tritiya 2024 : அட்சய திரிதியை உண்மையில் ஏன்  கொண்டாடுகிறோம் தெரியுமா..? முழு விளக்கம் இதோ..

பிளாஸ்டிக் பொருட்கள்: அட்சய திருதியை நாளில் பிளாஸ்டிக் பொருட்களை தவறுதலாக கூட வாங்காதீர்கள். மீறி, வாங்குபவர் வாழ்க்கையில் வறுமை சூழும். மேலும், அந்த நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைப்பதில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!