நவராத்திரி நாட்களில் நிகழ்த்தப்படும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் என்னென்ன..? வியவைக்கும் ஓர் சிறப்பு பார்வை..

First Published Sep 21, 2022, 11:13 AM IST

Navratri 2022: நவராத்திரி திருவிழா, 'தாண்டியா ஆட்டமும் ஆட, தசரா கூட்டமும் கூட' என்ற நடனத்துடன் 9 நாட்களும் வெகு விமர்சையாக கொண்டப்படுகிறது.

நாடு முழுவதும் கொண்டாடப்படும், இந்துக்களும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இது விஜயதசமி, தசரா, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுகா, குல்லு தசரா, துர்கா மா என இன்னும் பல்வேறு பெயர்களில் வெவ்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.  மற்ற திருவிழாக்கள் எல்லாம், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆனால் நவராத்திரித் திருவிழா மட்டும் தான் ஒன்பது நாட்கள் நடைபெறும் என்பது இதன் சிறப்பாகும். அதன்படி, இந்த ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

கர்நாடகாவில் தசரா:

கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். நவராத்திரி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான். ஆனால், உண்மையில் நவராத்திரித் திருவிழாவில் கொலு பொம்மை வைத்து வழிபடுவது ஒரு அங்கம் மட்டுமே.

மேலும் படிக்க..Navratri: நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்...முப்பெரும் தேவியர்கள் வழிபாடு ஏன் சிறப்பு வாய்ந்தது..?

கர்நாடகாவில், இந்த நாட்களில் நடனம் மிகவும் பிரசித்து பெற்றவை. யக்ஷகனா, புராணங்களிலிருந்து காவிய நாடகங்கள் மற்றும் இரவுநேர நடனம் போன்றவைகள் நவராத்திரியின் ஒன்பது இரவுகளிலும் இங்கு நடைபெறும். மைசூர் தசரா மிகுந்த ஆடம்பரமாகவும், தீமை மீதான வெற்றியை சித்தரிக்கும் நிகழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. மைசூரின் அரச குடும்பத்தினரும் அவர்களது ஜம்போ வாரிசும் நடத்தும் மாநில விழாவாக இது அனுசரிக்கப்படுகிறது.

கர்பா நடனம்:

மேற்கு இந்தியாவில், குறிப்பாக குஜராத் மாநிலத்தில், நவராத்திரி புகழ்பெற்ற கர்பா நடனத்துடன் கொண்டாடப்படுகிறது. கர்பா என்பது ஒரு அழகிய நடனமாகும், இதில் பெண்கள் கலாச்சார ஆடை அணிந்து, ஒரு பானையில் விளக்கை வைத்து சுற்றி நின்று வட்டமாக அழகாக நடனமாடுவார்கள். நவராத்திரி முழுவதும் இந்த நடன கொண்டாட்டங்கள் தொடரும்.‘கர்பா’என்ற சொல்லுக்கு கருவறை என்று பொருள், அதாவது பானையில் உள்ள விளக்கு, ஒரு கருப்பையில் உள்ள குழந்தையை அடையாளமாகக் குறிக்கிறது. 

தாண்டியா நடனம்:

இந்த புகழ்பெற்ற கர்பா நடன ஆர்பரியத்தில் கலந்து கொள்ள இந்தியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிகிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கிராமப்புறங்களில் தெருக்களிலும் வீடுகளிலும் கூட சில வகை கர்பா நடனங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்த நாட்களில் ஒன்பது தினங்களும் விரதமிருந்து கோவிலுக்கு சென்று துர்க்கைக்கு வழிபாடு செய்ய வேண்டும். குஜராத்தின் சில பகுதிகளில் தாண்டியா நடனமாடியும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மேலும் படிக்க..Navratri: நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்...முப்பெரும் தேவியர்கள் வழிபாடு ஏன் சிறப்பு வாய்ந்தது..?

தமிழகத்தில் கொண்டாட்டம்:

புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிறது நவராத்திரி. இந்த நாட்களில் தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு வைத்து  உறவினர்கள், நண்பர்கள், யாவர்களையும்  அழைத்துக் நாள்தோறும் வெகு சிறப்பாக பூஜைகள் செய்து வழிபடுவதுண்டு. அதே நேரத்தில் பக்தியுடன் தேவியை வணங்கித் துதிக்கும் பண்டிகையாகவும் இது  விளங்குகிறது. இந்த நாட்களில் தமிழ்நாட்டுக்குரிய, சிறப்பாகத் திகழும் பரதநாட்டியம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இந்த நாட்களில் ராமாயண நாடகங்கள் போடப்படுகிறது. விஜய தசமியன்று இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் பெரிய உருவங்களாக செய்து பொது இடங்களில் வைத்து பட்டாசுகளை வெடித்து  உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர். 

மோகினியாட்டம்:

  இந்த நாட்களில் மோகினியாட்டம் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மோகினியாட்டம் என்பது தென் இந்திய மாநிலமான கேரளாவில் நடைபெறும் ஒரு பாரம்பரிய நடனம் ஆகும்.பரதநாட்டியம் மற்றும் கதகளி நடன வகைகளின் தாக்கங்கள் மோகினியாட்டத்தில் காணக்கிடைக்கின்றன.

மேலும் படிக்க..Navratri: நவராத்திரியின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தில்...முப்பெரும் தேவியர்கள் வழிபாடு ஏன் சிறப்பு வாய்ந்தது..?

click me!