பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யாக இருப்பதால் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவரிடம் பேசியிருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜே.டி.எஸ். வேட்பாளரும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவை நாளை கட்சியில் இருந்து நீக்க உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் பாஜக ஜே.டி.எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் பாஜக கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
undefined
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு எஸ்.ஐ.டி. குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறியுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யாக இருப்பதால் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து அவரிடம் பேசியிருப்பதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து நீக்கப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மதசார்பற்ற ஜனதா தளம் செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 2வது கட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.