Pillow : தலையணை இல்லாமல் தூங்கினால் இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

First Published Apr 29, 2024, 8:45 PM IST


உங்களுக்கு தெரியுமா..தலையணை இல்லாமல் தூங்கினால் தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.

ஒரு மனிதன் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்து இரவு நிம்மதியான தூக்கத்தை விரும்புகிறான். ஒருவேளை உங்களுக்கு தூக்கமின்மை, சோம்பல் இருந்தால் பல பிரச்சினைகள் இருந்தால், கவனமாக இருங்கள். ஏனெனில், இது போன்ற பிரச்சனை நீண்ட காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

நிபுணர்களின் கூற்றுப்படி, சில சிறிய பழக்கங்கள் நம் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவற்றில் ஒன்று தான் இரவில் தலையணை 
இல்லாமல் தூங்குவது. இப்படி தூங்கினால், உடலுக்குப் பல நன்மைகள் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களால் தலையணை இல்லாமல் தூங்க முடியவில்லை என்றால், உங்கள் தலையணை மெல்லியதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு பல வழிகளில் பயன் தரும்.

கட்டாயம் தலையணை வைத்து தூங்குபவர்களும் சில வகையான தோல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அவற்றில் ஒன்றுதான் முகப் பருக்கள். எப்படியெனில், தலையணை வைத்து தூங்கும் போது தலையணையில் முகம் ஒட்டியிருக்கும். இதனால் தலையணையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் அழுக்கு உங்கள் முகத்தில் பரப்புகிறது. இதனால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, முகத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே, சருமத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் தலையணை இல்லாமல் தூங்கினால் நல்லது 
என்கின்றனர் நிபுணர்கள்.

அதுமட்டுமின்றி, தலையணை இல்லாமல் தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் தடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கினால் இத்தனை நன்மைகளா..?

ஒருவேளை, உங்களுக்கும் தலையணை வைத்து தூங்கும்  பழக்கம் இருந்தால், உயரமான தலையணைக்கு பதிலாக மிகச் சிறிய தலையணையைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், உயரமான தலையணையைப் பயன்படுத்தினால் கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் வலி ஏற்படும்.

இதையும் படிங்க:  அட இனி உங்கள் தலையணையை இப்படி சுத்தம் செய்து பாருங்க! புதுசு போல் பளிச் பளிச்சு தான்...!!

உங்களுக்கு தெரியுமா.. தலையணை இல்லாமல் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும். தலையணை தலையின் கீழ் இருந்தால், அது முதுகெலும்பை பாதிக்கும். நீங்களும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டால் கவனமாக இருங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!