பரோலில் வந்த குற்றவாளிக்கு 4 திசைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - திருச்சியில் பரபரப்பு

Published : Apr 29, 2024, 08:16 PM IST
பரோலில் வந்த குற்றவாளிக்கு 4 திசைகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - திருச்சியில் பரபரப்பு

சுருக்கம்

15 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து வெளிவந்துள்ள சரித்த பதிவேடு குற்றவாளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மதுரை கீரைத்துறை காமராஜபுரம் திருவிக நகரைச்  சேர்ந்தவர் காளீஸ்வரன் (எ) வெள்ளைக்காளி (வயது 37). சரித்திர பதிவேடு ரௌடியான இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள், 30 குற்ற வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவரது கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட  ரௌடிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைக் காளிக்கு, 15 நாட்கள் பரோல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்  திருச்சி மாவட்ட போலீஸ் எல்லையில் உள்ள அவரது சகோதரி சத்யஜோதி வீட்டில் 15 நாட்கள் தங்கிச் செல்ல விருப்பம் தெரிவித்தார்.

வெளி நாட்டில் வேலை, லட்சங்களில் சம்பளம்; பல இளைஞர்களுக்கு வலை விரித்து மோசடி - கோவையில் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து கடந்த 25ம் தேதி வெள்ளைக்காளியின் வருகையை முன்னிட்டு அவரது சகோதரி சத்யஜோதி மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு  வரவேற்றனர். ரௌடி வெள்ளைகாளியின் உயிருக்கு மிரட்டல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ள  நிலையில் உஷாரான திருச்சி மாவட்ட போலீசார் அவர் தங்கியுள்ள இடத்தின் நான்கு திசைகளிலும் துப்பாக்கிகளுடன் கண்காணிப்புப் பணி  மேற்கொள்ளும் போலீசாருடன் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 25 போலீசார் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் 15 நாட்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணும் நாளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை - ராதாகிருஷ்ணன் விளக்கம்

மேலும் திருச்சியில் இருந்து மீண்டும் வேலூர் சிறைச்சாலைக்குச்  செல்லும்வரை வெள்ளைக்காளியைப்  பாதுகாப்புடன் பத்திரமாக அனுப்புவது என முடிவெடுத்தனர். மேலும் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி அவர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பில் தற்போது உள்ளார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு