இன்று உலக முத்த தினம்..! தினமும் முத்தம் கொடுத்தால் இவ்வளவு நன்மையா..? அடடே..இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.?

First Published Jul 6, 2022, 12:54 PM IST

International Kissing Day 2022: முத்தம் என்பது காமம் தொடர்பானது, மட்டுமில்லை. அது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகும். அப்படியாக, இன்று உலக முத்த தினம் கொண்டப்படுவதால் அவற்றின் சுவாரஸ்யமானஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

International Kissing Day 2022:

இன்றைய பிஸியான வாழ்கை முறையில், அன்புக்குரியவர்களுக்கு முத்தமிட பலர் மறந்துவிடுகிறார்கள்  இதை நினைவூட்டும் விதமாகவே கடந்த 2000ஆவது ஆண்டு முதல் ஜூலை 6ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முத்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

International Kissing Day 2022:

முத்தத்தை கொடுத்தாலும் சரி அன்பானவர்களிடம் இருந்து முத்தத்தை பெற்றாலும் சரி உடலும் மனமும் உற்சாகம் அடையும். காரணம் முத்தத்தினால் ரத்த அணுக்களின் ஒவ்வொரு செல்லும் உற்சாகமடைகிறது. அன்பான முத்தம் தொடங்கி, பிரச்சனையை ஏற்படுத்திய மருத்துவ முத்தம் வரைக்கும் பரபரப்பை ஏற்படுத்திய முத்தங்கள் உள்ளன.

மேலும் படிக்க....Relationship: உடலுறவின் போது ஏற்படும் மரணம்..என்ன காரணம்..? மருத்துவர்கள் எச்சரிக்கை...

International Kissing Day

முத்தத்தில் பல வகைகள் உண்டு:

சாதாணமாகக் கன்னத்தில் முத்தமிடுவது, நெற்றியில் முத்தமிடுதல்,  உதட்டில் ஒரு முறை மட்டும் ஒற்றி எடுப்பது. மரியாதை கலந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் கையில் முத்தமிடுதல், இயக்குனர் ராம் சொல்லும் மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரிந்த முத்தம் இப்படி முத்தத்தில், பல விதம் இருக்கிறது. முத்தத்தின் அர்த்தம் கொடுக்கப்படும் நபர், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப மாறுபடும். 

International Kissing Day

முத்தம் கொடுப்பதால்  ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்:

1. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடே முத்தம் ஆகும். அப்படி, முத்தம் கொடுக்கும் போது, மூளையில் ரசாயனங்களை தூண்டி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

2. காதலர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிப்பதிலும், அவர்களின் காதலை அடுத்தகட்டத்தை நோக்கி எடுத்துச் செல்வதிலும் முத்தத்தின் பங்கு முக்கியமானது. இதனால், உடலில் ‘மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோன்களை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க....Relationship: உடலுறவின் போது ஏற்படும் மரணம்..என்ன காரணம்..? மருத்துவர்கள் எச்சரிக்கை...

International Kissing Day

3. நீங்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, உங்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும். இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும். கண்கள் விரிவடையும். முத்தம் கொடுக்கும் போது  நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். 

4. முத்தமிடும் போது, உதடுகளுக்கு உணரும் திறன் அதிகம் இருப்பதால், தொடுதல் போன்ற அற்புதமான உணர்வு ஏற்படும். இதனால், மன அழுத்தம், பதற்றம், தலைவலி போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது. 

International Kissing Day

5. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் கலோரிகளையும் எரிக்கவும் உதவுகிறதாம். அதுமட்டுமின்று, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

6. நாம் குழந்தைகளாக இருக்கும்போது, பெற்றோர் நம்மை முத்தமிடுக்கின்றனர். இதனால், நம் மூளையில் உள்ள நரம்பியல் வழிகள் மூலம் நேர்மறையான உணர்ச்சிகளுடன் பல உதடு தூண்டுதல்கள் (lip stimulations) தொடர்புபடுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க....Relationship: உடலுறவின் போது ஏற்படும் மரணம்..என்ன காரணம்..? மருத்துவர்கள் எச்சரிக்கை...

click me!