Vaginal: பெண்களே..! பிறப்புறுப்பை சுகாதாரமாக பராமரிப்பதற்கு சில யோசனைகள்...அது எவ்வளவு முக்கியம் தெரியுமா..?

First Published Aug 13, 2022, 7:02 AM IST

Vaginal Infection: பெண்கள் தங்கள் பிறப்புறுப்பை எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்? எந்த தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

vaginal infection

ஒவ்வொரு நபரும் உடல் ஆரோக்கியமும், சுகாதாரமும் பெற்றிருக்கு வேண்டியது அவசியம். அந்த வகையில், குறிப்பாக பெண்கள் தங்கள் பிறப்புறுப்பு சுகாதாரத்தின் மீது முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. இப்பகுதியில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேச தயங்குவதால், பெண்களுக்கு பிற்காலத்தில் பெரிய பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே. அந்தரங்க உறுப்பை எப்படி சுகாதாரமாக பராமரிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

vaginal infection

மாதவிடாய் பிரச்சனை:

மாதவிடாய் நாட்களில் ஒரே நாப்கினை தொடர்ந்து பல மணி நேரம் உபயோகிப்பதால் அரிப்பு சரும பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.இதன் மூலம் பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்புடன் கூட புண்களும் வருகிறது. எனவே அதன் தீவிரம் கருதி, உடனே சானிட்டரி நாப்கினை மாற்றுதல் வேண்டும் . ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது.

மேலும் படிக்க...Kideny: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிட கூடாது..? இதை ஃபாலோ பண்ணுங்க போதும் ..

vaginal infection

உள்ளாடைகள் உபயோகித்தல்

நாள் முழுவதும் அணியும் உள்ளாடைகள் அதிக அழுக்காகவும், ஈரப்பதத்துடன் இல்லாமல் இருக்க வேண்டும். அதேபோன்று, உள்ளாடைகள் இறுக்கமாக அணியாமல் சற்று தளர்வாக அணிய வேண்டும். உள்ளாடைகள் வாங்கும் போது, உயர்தர பருத்தியால் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை தேர்வு செய்வது அவசியம். 
 

vaginal infection

சிறுநீர் கழித்த பிறகு:

சிறுநீர் கழித்த பிறகு தண்ணீரால் கழுவி விட்டு பிறப்புறுப்பை சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.  குறிப்பாக, பிறப்புறுப்பின் பக்கவாட்டு பகுதி, அதாவது உதடு போன்ற பகுதியை மட்டுமே சுத்தம்செய்ய வேண்டும். இதன் மூலம் நோய்க்கிருமியால் ஏற்படும பாதிப்பை தவிர்க்கலாம். அதேபோன்று, பிறப்புறுப்பு பகுதியில் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடர், கிரீம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

vaginal infection

சோப்பு:
 
பிறப்புறுப்பு மிகவும் மிருதுவான பகுதி. எனவே, அதிக வேதிப்பொருட்கள், கடினத்தன்மை அற்ற சோப்பைப் பயன்படுத்தலாம். ஆனால் அதில் எந்த நறுமணமும், அல்லது க்ளிட்டர் போன்ற தயாரிப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இதன்மூலம் பாதிப்பு ஏற்படுத்தும் பூஞ்சை தொற்று ஏற்பட கூடும். மேலும், அதன் நறுமணமூட்டப்பட்ட வாஷ்கள் நிச்சயம் அரிப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...Kideny: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிட கூடாது..? இதை ஃபாலோ பண்ணுங்க போதும் ..

vaginal discharge

பிரச்சனைகளை உடனே சரிசெய்தல்

பிறப்புறுப்பு பகுதியில் உள்ள முடியை ஷேவ் செய்வது, கத்திரிப்பது போன்ற செயல்களால் காயம் ஏற்படலாம். இதன் மூலம் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பிறப்புறுப்பை சுத்தம்செய்யும்போது, மேலிருந்து கீழாக, (அதாவது இடுப்புப் பகுதியில் இருந்து கீழ்நோக்கி சுத்தம் செய்ய வேண்டும்) கீழிருந்து மேல்பக்கமாக சுத்தம் செய்தால், பின்புறத்தில் இருக்கும் அழுக்கின் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க...Kideny: சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிட கூடாது..? இதை ஃபாலோ பண்ணுங்க போதும் ..

click me!