'தல' அஜித்தின் பிறந்தநாளில்... அவர் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்! ஆச்சர்ய வீடியோ!

Published : May 01, 2024, 03:50 PM IST
'தல' அஜித்தின் பிறந்தநாளில்... அவர் படத்தை தன் தலையால் வரைந்த ஓவியர்! ஆச்சர்ய வீடியோ!

சுருக்கம்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, "தலையாலேயே" தலை உருவத்தை வரைந்தார்.  

 'அஜித்' - இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இன்று தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

 திறத்துறையில் எந்தவித பின்புலமின்றி அறிமுகமாகி இன்று தனது விடாமுயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித், இன்று மட்டுமல்ல தமிழ் சினிமா இருக்கும் வரை அதில் அஜித் எனும் தன்னம்பிக்கை நாயகனின் பெயர்  ஒலித்து  கொண்டே இருக்கும்.

Ajith Unknown Facts: மகள் பிறந்த பின் மாறிய அஜித், AK அதிகம் மதிக்கும் ஒரே நடிகர்? பலரும் அறிந்திடாத தகவல்கள்!

 உழைப்பாளர் தினத்தில் பிறந்து கடின உழைப்பால் ஓர் உன்னத மனிதராகவும் உயர்ந்து நிற்பவர் அஜித்,   ரசிகர்கள் அன்போடு தல என்று அழைக்கப்படும் அஜித்திற்கு நாடு முழுவதும் விசுவாசமான ரசிகர்கள் உள்ளனர்.

 நடிகர் அஜித் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஓவியர் 
சு.செல்வம்  வித்தியாசமான முறையில், நடிகர் அஜித் அவர்களை  ரசிகர்கள் அன்போடு அழைக்கும் 'தல' இந்தப் பெயர் குறிக்கும் விதமாக ஓவியர் சு.செல்வம் தன்  தலையில் பிரஷ் வைத்துக்கொண்டு நீர் வண்ணத்தில் பிரஷ் தொட்டு "தலையாலேயே"   'தல' அஜித் படத்தை ஐந்து நிமிடங்களில் வரைந்தார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள், அஜித் ரசிகர்கள் தல படத்தை தலையாலேயே வரைந்தது அருமை என்று ஓவியர் செல்வத்தை பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa