அதாவது, ஷண்முகத்திற்கு யோசித்து யோசித்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் வைத்து அவனுக்குள் ஒரு ஐடியா தோன்றுகிறது. சௌந்தரபாண்டி வீட்டில் தூக்கம் வராமல் அலைந்து கொண்டிருக்க முத்துப்பாண்டி என்ன ஆச்சு என்று கேட்க எப்படிடா அந்த ஷண்முகம் எனக்கு முன்னாடி கோர்ட் சூட் போட்டு ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தங்கலாம் என்று ஆவேசப்படுகிறார்.