ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படுவது ஏன்? அதை எப்படி தவிர்க்கலாம்? நிபுணர்கள் விளக்கம்..

First Published Sep 21, 2022, 12:19 PM IST

Heart attack: ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. இதற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கம்  பற்றி தெரிந்து கொள்வோம்.

raju srivastava

அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. சமீபத்தில், 59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, ததிடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இது முதல் தடவை அல்ல முன்னதாக, கன்னட சினிமா உலகின் உச்சபட்ச ஸ்டார்களில் ஒருவர் புனித் ராஜ்குமார், தனது 46 வயதில் கடந்த 2021 ஆம் ஆண்டு உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க...Beauty tips: இயற்கை அழகிற்கு புதினாச் சாறு போதும்! பியூட்டி பார்லர் போகமாலே உங்கள் முகம் பளிச்சினு மின்னும்..

heart atack

சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற மரணங்கள்  அதிகரிக்க துவங்கியுள்ளது.  உடற் பயிற்ச்சி போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், தீவிர உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்குமா என்பது பற்றிய கேள்வி விவாதத்திற்கு வழிவகுத்தது.

heart attack

இது குறித்து பிரபல இருதயநோய் நிபுணர் கூறும்போது, உடற்பயிற்சி அல்லது அதிக உடல் செயல்பாடுகளின் போது திடீர் மாரடைப்பு ஏற்படுவது, ஏற்கனவே உள்ள அடைப்புகள், காரணமாக இருக்கலாம் என்று விளக்கியுள்ளார். இதயத்தில் உள்ள அடைப்புகள், செல்கள் மற்றும் கொலஸ்ட்ரால் துகள்கள் எண்டோடெலியல் செல்களின் தடையை உடைத்து தமனியின் புறணிக்குள் ஊடுருவுவதன் விளைவாக தமனியில் பிளேக் எனப்படும் பம்ப் உருவாகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது என்கிறார். 

heart attack

மாரடைப்பு என்றால் என்ன..?

இருதயத்துக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் அடைபடும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இருதயத்துக்கான ரத்த ஓட்டம் தடுக்கப்படும் போது, உடலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் புகைப்பழக்கம், உடல்பருமன், நீரிழிவு, இரவு தூக்கத்தை தவிர்த்தல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்பாடின்றி இருத்தல் ஆகியவையும், இவற்றுடன் கூடிய மன அழுத்தமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும்.

heart attack

மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நெஞ்சு வலி இதய நோயின் பொதுவான அறிகுறியாகும். வலி படிப்படியாக தோள்கள், கைகள், முதுகு, கழுத்து, கீழ் தாடை, பற்கள் என பரவும்.பின்னர்,  உடல் சோர்வு, அஜீரணம், வயிற்று வலி போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குளிர்ந்த காலநிலையிலும் வியர்த்துக் கொட்டும். அறிகுறிகளில் சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், தலைச்சுற்றல், வேகமாக இருதயம் துடிப்பது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும்.

மேலும் படிக்க...Beauty tips: இயற்கை அழகிற்கு புதினாச் சாறு போதும்! பியூட்டி பார்லர் போகமாலே உங்கள் முகம் பளிச்சினு மின்னும்..

heart attack

தடுப்பதற்கான வழிமுறைகள்:

ஜிம்மில் அதிக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். இல்லையெனில் உடல் சோர்வு, மயக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே, அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை உணர்ந்து உடல்பயிற்சி செய்யும் போது, உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ள நேரம் ஒதுக்குவது அவசியம்.மேலும், பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் நிபுணர்களின் உதவியோடு பயிற்சி மேற்கொள்வதே சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் படிக்க...Beauty tips: இயற்கை அழகிற்கு புதினாச் சாறு போதும்! பியூட்டி பார்லர் போகமாலே உங்கள் முகம் பளிச்சினு மின்னும்..

click me!