தீபாவளி நாளில் ஏற்படும் காற்று மாசுபாட்டில் இருந்து..ஆஸ்துமா நோயாளிகள், தங்களை தற்காத்து கொள்வது எப்படி?

First Published Oct 20, 2022, 8:03 AM IST

Tips for Asthma Patients Ahead of Diwali: தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசுபாட்டில் இருந்து, தற்காத்து கொள்ள ஆஸ்துமா மற்றும் இருதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24, 2022 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பண்டிகையாகும். இந்த நாளில் மக்கள் புத்தாடை அணிந்து, உணவு சமைத்து, பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.  

மேலும் படிக்க..தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

தீபாவளிக் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் கொண்டாட்டங்களின் போது எழும் பிரச்சனைகளுக்கு நான்கு முக்கிய காரணங்கள் உண்டு. அவை,  தீ, ஒலி மாசுபாடு, காற்று மாசுபாடு முக்கியமானவை ஆகும். 

தீபாவளியின் போது பட்டாசுகளைப் பயன்படுத்துவது ஒரு பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை, கொண்டாட்டத்தின் அடையாளமாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும்.

எனவே, இந்த நாளில்  காற்று மாசுபாடு மோசமான நிலைக்கு திரும்புவதால், அடிக்கடி சுவாச பிரச்சனைகள் கடுமையாக இருக்கும். அதிலும் குளிக்கலாம் என்பதால், பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முறையில் இருக்க, ஆஸ்துமா மற்றும் இருதய நோயாளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

1. பெரும்பாலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது அவசியம்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை நிறைய சாப்பிடுங்கள்.

3. உணவுகள் பெரும்பாலும் வீட்டிலேயே சமைத்து சூடாக சாப்பிட வேண்டும்.  

4. அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்துடன் இருங்கள். 

5. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கான பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது, இனிப்புகள் மற்றும் பிற ஆரோக்கியமற்ற தின்பண்டங்களுக்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுக்கவும். 

6. தீபாவளி நாளில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்டுவதால், அந்த நாளில் அதிகாலையில்  நடைப்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்கவும்.

7. ஒருவேளை உங்களுக்கு வறட்டு இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சில் பாரம் போன்ற தொந்தரவுகள் இருந்தால்,  மருத்துவர்களை உடனே அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

8. தீபங்களின் திருவிழாவான தீபாவளி உங்கள் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான பாதையை பிரகாசமாக்கட்டும்.

மேலும் படிக்க..தீபாவளி அன்று உங்கள் முகம் தேவதை போல் ஜொலிக்க...இந்த ஒரு வாரம் மட்டும் இந்த அற்புத ஜூஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

click me!