ஓவரா தண்ணீர் குடித்தால் ஆபத்து, அட உண்மைதாங்க..! குங்ஃபூ கலையின் ஜாம்பவான் புரூஸ்லி இறந்தது எப்படினு தெரியுமா?

First Published | Mar 16, 2023, 12:57 PM IST

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்து வருமா? புரூஸ்லியின் மரணத்திற்கும் அதற்கும் தொடர்பு உண்டா? இந்த கேள்விகளுக்கு இந்த பதிவில் விளக்கம் காணலாம்.  

ஹாங்காங்கில் 1973ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று குங்ஃபூ கலையின் ஜாம்பவானான புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார். அவருக்கு விஷம் அளிக்கப்பட்டதாக ஒருதரப்பினரும், பயிற்சியில் ஈடுபடும்போது சுவரில் தலை மோதியதால் ஏற்பட்ட மூளை கசிவால் அவர் மரணம் அடைந்தார் என மற்றொரு தரப்பினரும் பேசினர்.

கடந்த 2018இல் அவர் அதிக வெப்பத்தால் இறந்தார் என்றும் கூட சொல்லப்பட்டது. ஆனால் காலங்கள் உருண்டோடிய பிறகு அவர் இறந்து போனதற்கு வேறொரு காரணத்தை ஆராய்ச்சியளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

Latest Videos


அண்மையில் ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் புரூஸ்லியின் மரணம் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் அவர் அதிகமாக தண்ணீர் பருகியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது. அதிகம் தண்ணீர் குடித்ததால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியா பாதிப்பால் அவர் இறந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, புருஸ்லியின் இரத்தத்தில் மிகக் குறைந்த சோடியம் செறிவு இருந்தது.

அதாவது 'ஹைபோநெட்ரீமியா' வின் ஆபத்து அவருக்கு இருந்துள்ளது. புருஸ்லி அதிகம் நீர் அருந்தும் பழக்கம் கொண்டிருந்தாராம். மரிஜுவானா எனும் போதைவஸ்து பயன்பாடு, மது அருந்துதல், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் பல விஷயங்களும் புருஸ்லியின் மரணத்திற்கு வரலாறுக்கு பின்னுள்ளது. 

இதையும் படிங்க: கையில காசு நிக்காம வரவுக்கு மிஞ்சிய செலவு வருதா? வீட்டுல இந்த விஷயத்தை கவனிங்க.. பணம் தங்க 3 வாஸ்து டிப்ஸ்!

இந்த ஆய்வின் முடிவில், புரூஸ்லி ஒரு குறிப்பிட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்தார் என சொல்லப்படுகிறது. அவருடைய சிறுநீரகம் போதுமான தண்ணீரை வெளியேற்ற இயலாமல் சிரமப்பட்டு தான் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது நம் உடலில் சோடியம் மாதிரியான எலக்ட்ரோலைட் அளவில் தாக்கம் உண்டாகும். அதாவது சோடியம் மாதிரியான எலக்ட்ரோலைட் அளவில் மாற்றம் உண்டாகி ரத்தத்திலிருந்து நீர்த்துவிடும். 

ஹைபோநெட்ரீமியா (Hyponatremia) என்றால் என்ன? 

ஹைபோநெட்ரீமியா என்றால் உடலில் இருக்கும் இரத்தத்தில் காணப்படும் சோடியத்தின் அளவுகள் குறைவாகி ரத்தம் நீர்த்து போகும் ஆபத்தான நிலை. இதனால் ரத்த செல்களை வீக்கமடையச் செய்யும் அபாயம் இருக்கிறது. இப்படி ரத்த செல்கள் வீக்கும்போது முதலில் மூளைக்குள் பிரச்னை ஏற்படும். இதனால் குமட்டல், மயக்கம், தலைவலி, தசை வீக்கமடைதல்/ தசைபிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. குறைவாக தண்ணீர் குடித்தாலும் பிரச்னைதான்.. அதிகமாக நீர் அருந்தினாலும் பிரச்சனை தான்.. அளவோடு தண்ணீர் குடித்து நலம் வாழுங்கள். 

எந்த காரணத்திற்காகவும் ஒரே நேரத்தில் லிட்டர் கணக்கில் தண்ணீரை போட்டிபோட்டு குடிக்கக் கூடாது. அளவுக்கு மிஞ்சும் எதுவும் நஞ்சுதான். அதில் நீருக்கு விதிவிலக்கு அல்ல. புரூஸ்லி மரணமடையும்போது அவருக்கு வயது வெறும் - 32 தான். அதனால் எல்லோரும் தண்ணீர் குடிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

இதையும் படிங்க: கருப்பட்டி வச்சு காபி போடாம அதை வைத்து வெயிலை சமாளிக்கும் 4 பானங்கள்..மலையை புரட்டும் அபார சக்தி கிடைக்கும்..!

click me!