கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்னைகள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. அந்த வகையில், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கோடைக்காலம் துவங்கவுள்ளது. ஆனால் இந்த பிப்ரவரி மாதத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவாகியுள்ளது. வரும் காலங்களில் இந்நிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கோடைக் காலத்தை முன்னிட்டு உணவு சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருப்பது மிகவும் முக்கியம். வெயில் காலங்களில் அதிகமாக வெளியில் செல்வதை தவிர்க்கவும். அவ்வப்போது தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.
அதேபோன்று கோடைக்காலத்தில் அசைவ உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பலர் கூறுவதை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனால் இதை நம்மில் பலரும் கேட்பதே கிடையாது. கோடையில் அசைவம் அதிகமாக சாப்பிடுவது, உடலின் வெப்பநிலையை சராசரி நிலையை விடவும் அதிகரித்துவிடும். அதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள், நோய்கள் போன்றவை ஏற்படும். ஒருசில சமயங்களில் அவை தீவிரமாகவும் மாறக்கூடும்.
மாற்று உணவு என்ன?
அசைவத்தைக் குறைப்பதோடு, பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை உடல் வெப்பநிலையை சீராக்க உதவும். மேலும் நீரிழிவு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும். எலுமிச்சை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வெப்ப அலையைத் தடுக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
curd
மதிய உணவு என்ன சாப்பிடலாம்?
கோடையில் தண்ணீர் குடிப்பதைத் தவிர, 'எலக்ட்ரோலைட்' நிறைந்த பானங்களை அதிகம் குடிக்கவும். இவை உடலை நீரேற்றமாக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதேபோன்று மதிய வேளையில் சாம்பரம் அல்லது மோர் கலந்து சோறு சாப்பிடுங்கள். ஒருவேளை வேறு சைவ உணவுகளை சாப்பிட்டாலும், கடைசியாக ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இதன்மூலம் வெப்பம் உடலை விரைவில் பாதிக்காமல் தடுக்கப்படும்.
உணவுக்கு பதில் பழச்சாறு பருகலாமா?
பெரும்பாலானோர் வெயில் காலங்களில் சுடச்சுட சோறு சாப்பிடுவதை விடவும், பழங்கள் மற்றும் பழச்சாறு போன்றவற்றை உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கோடைக்காலங்களில் பழங்களை தாராளமாக சாப்பிடலாம். ஆனால் சோறு சாப்பிடுவதை நிறுத்துவிடக்கூடாது. எப்போதும் சோறு சாப்பிட்டவுடன் வெள்ளரி ஜூஸ், எலுமிச்சை மற்றும் புதினா சேர்க்கப்பட்ட ஜூஸ்களை பருகுவது உடலுக்கு நல்லது.
diabetes
நீரிழிவு நோய் இருப்பவர்கள் என்ன சாப்பிடலாம்?
கோடைக்காலத்தில் மக்கள் அதிகம் உட்கொள்ளும் மற்றொரு பானம் இளநீர். இளநீர் என்பது 'எலக்ட்ரோலைட்டுகள்' நிறைந்த பானம். இளநீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. ஆனால் நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் இளநீர் பருகுவதில் கட்டுப்பாடு வேண்டும். அதேபோன்று சக்கரை பாதிப்பு இருப்பவர்கள், அவ்வப்போது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
நம்பமுடிகிறதா? பாலியல் ஹார்மோனை ஆரோக்கியமாக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி..!!
என்னென்ன காய்கறிகள் சாப்பிடலாம்?
பருவகால காய்கறி சாறுகளும் சரியான கோடைகால பானங்கள். இவற்றை முடிந்தவரை வழக்கமானதாக மாற்ற முயற்சிக்கவும். அதனால் கோடைக்காலத்தில் என்னென்ன காய்கறிகள் கிடைக்குமோ, அதை வாங்கி சமையல் செய்யுங்கள். கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறதே என்று மாற்று பருவக் கால காய்கறிகளை வாங்கி சமைக்க வேண்டாம்.