நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படை ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது தண்ணீர். ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது இன்றளவும் பலருக்கும் சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும், தாகம் எடுக்கும் போதெல்லாம் நன்றாக தண்ணீர் குடிப்பது நல்லது. இந்நிலையில், குளிர்ந்த நீரை குடிப்பதனால் ஆரோக்கியத்திற்கு சிக்கல் ஏற்படும் என்பது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால், தொண்டை வலி முதல் இதயத் துடிப்பு பிரச்சனை வரை ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
குளிர்ந்த நீர்
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, உடலின் அத்தியாவசியமான செயல்பாடுகளை செய்ய உதவி புரிகிறது. ஆனவே, தினந்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நம்மில் சிலர் குளிர் காலத்தில் கூட குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால், இப்படி செய்யக் கூடாது. ஏனென்றால், குளிர் காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும். குளிர் காலத்தில் குளிர்ந்த நீரைக் குடிப்பதனால் உண்டாகும் தீமைகள் என்னென்ன என்பதை இங்கே அறிந்து கொள்வோம்.
குளிர்ந்த நீர் குடிப்பதன் விளைவுகள்
தொண்டை வலி
குளிர் காலத்தில், சளி மற்றும் தொண்டைப் புண் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இப்படியான சூழலில் குளிர்ந்த நீரை குடித்தால், இந்தப் பிரச்சனைகள் இன்னமும் அதிகரித்து விடும். மேலும், குளிர்ந்த நீரைக் குடிப்பதனால், சுவாச மண்டலத்தில் சளி உருவாகும். இதன் காரணமாக பல சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கொழுப்பு பிரச்சனை
நீங்கள் குளிர்ந்த நீரைக் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையாது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் தான் குளிர் காலத்தில் குளிர்ந்த நீர்க் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
செரிமான பிரச்சனை
குளிர்ந்த நீரைக் குடிப்பதன் காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்கி, செரிமானத்தில் பிரச்சனைகளை உண்டாகி, வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகவே, குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதய துடிப்பு பிரச்சனை
குளிர்ந்த நீரும் இதயத் துடிப்பைக் குறைத்து விடும். ஏனென்றால் குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் குடிப்பதனால், நரம்புகள் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பைக் குறைக்கும். ஆகையால் குளிர் காலத்தில் குளிர்ந்த நீர்க் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பற்களுக்கு தீங்கு
குளிர் காலத்தில், குளிர்ந்த நீர் குடிப்பது பற்களை சேதப்படுத்தும். ஏனென்றால் குளிர்ந்த நீர், பற்களின் நரம்புகளை வலுவிழக்கச் செய்து விடும். ஆகவே, உங்களின் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால், தப்பித் தவறிக் கூட குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம்.