இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின் தன் மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நெட்டிசன்கள் தனுஷை கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிவது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சையிந்தவி ஜோடியின் விவாகரத்தும், நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்தும் மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆன நிலையில், அதையெல்லாம் மிஞ்சும் வகையில் நேற்று இரவு ஒரு பேரிடியாய் வந்த அறிவிப்பு தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு தம்பதியின் விவாகரத்து செய்தி.
25
AR Rahman Divorce Memes
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் தீரா காதலுடன் இருந்து வந்த இந்த ஜோடிக்கு கதீஜா, ரஹீமா என இரு மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் உள்ளனர். திருமணமாகி 29 ஆண்டுகள் வாழ்ந்த இந்த ஜோடி தற்போது திடீரென விவாகரத்து முடிவை அறிவித்து இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மிகுந்த வலி மற்றும் வேதனையோடு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்தி டிரெண்ட் ஆன கையோடு, நடிகர் தனுஷின் பெயரும் சோசியல் மீடியாவில் அதிகம் டிரெண்ட் ஆனது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் யார் விவாகரத்து முடிவை அறிவித்தாலும் தனுஷின் பெயரை அதில் இழுத்துவிட்டு மீம் கிரியேட்டர்கள் கலாய்ப்பதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்தின் போதும் தனுஷின் பெயர் அடிபட்டது.
45
Mems about AR Rahman Divorce
அதேபோல் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய பின்னர் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்ததாக குறிப்பிட்டு நெட்டிசன்கள் தனுஷை ட்ரோல் செய்தனர். தற்போது அதே ஒரு நிலை தான் ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து விஷயத்திலும் வந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் கடைசியாக பணியாற்றியது தனுஷின் ராயன் படம் தான். அதைக் குறிப்பிட்டு அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
55
Viral Memes of Dhanush
எவன் டைவர்ஸ் பண்ணாலும் உன்னைத்தான் அடிப்பாங்க, பாய் டைவர்ஸ் காண்ட்ரவர்ஸில இருந்து மட்டும் தாண்டிட்டேனா நீ தான் ப்ரோ ரியல் வீரன் என்று கலாய்த்து நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள மீம் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி மெட்ராஸ் படத்தில் வரும் சுவரில் தனுஷின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதை போல் எடிட் செய்து, ஊர்ல யாருக்கு டைவர்ஸ் ஆனாலும் அண்ணனை தான் முதல்ல தேடுறாங்க என்று குறிப்பிட்டு போடப்பட்டுள்ள மீமும் டிரெண்டாகி வருகிறது.