MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மனைவியை பிரிந்த ஏ ஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு – என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

மனைவியை பிரிந்த ஏ ஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு – என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

AR Rahman Divorce Reason : 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு சாய்ரா பானு விவாகரத்து குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் எக்ஸ் பக்கத்தில் என்ன சொல்லிருக்கிறார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Rsiva kumar
Published : Nov 20 2024, 07:59 AM IST| Updated : Nov 20 2024, 08:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
AR Rahman Divorce Reason, A. R. Rahman

AR Rahman Divorce Reason, A. R. Rahman

AR Rahman Divorce Reason : உலகமே கொண்டாடும் இசையமைப்பாளர் ஆஸ்கர் வென்ற ஏ ஆர் ரஹ்மான். இவரை மிஞ்ச எவரும் இல்ல என்று அளவிற்கு எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லக் கூடியவர். திருமண ஜோடிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் என்றால் அது ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தான். கடந்த 1995 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஏ ஆர் ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தன்னோட சினிமா வாழ்க்கையை பாதிக்காத எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை பார்க்குமாறு அம்மாவிடம் சொன்னதாகவும், இது அம்மா பார்த்து வைத்த திருமணம் என்றும் என்று ஏ ஆர் ரஹ்மானே முன்பு கூறியிருந்தார்.

26
AR Rahman Daughter Raheema, AR Rahman Saira Banu Divorce

AR Rahman Daughter Raheema, AR Rahman Saira Banu Divorce

இவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மானின் இந்த வளர்ச்சிகும் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தவர் சாய்ரா பானு என்று கூட சொல்லலாம். சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்தாலும், திருமண வாழ்க்கையில் பல கசப்பான தருணங்களை தான் இருவரும் அனுபவித்து வந்திருக்கின்றனர். அதனுடைய கடைசி எல்லையான விவாகரத்து தான் ஒரே முடிவு என்ற தீர்மானத்துக்கு வந்த பிறகு சாய்ரா பானு அதிகாரப்பூர்வமாக கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார்.

36
AR Rahman Daughter, AR Rahman Son

AR Rahman Daughter, AR Rahman Son

இதன் மூலமாக 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. கணவரை பிரிந்த சாய்ரா பானு தன்னுடைய விவாகரத்துக்கான காரணத்தை கூறியிருப்பதாவது: திருமணமாகி பல வருடங்கள் கழித்து தனது கணவர் ஏ ஆர் ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவானது தங்களது உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்ச்சிப்பூர்வமான அழுத்தத்திறுகு பிறகு ஏற்பட்டது. மிகுந்த வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த இக்கட்டான நேரத்தில் தங்கள் நிலையை புரிந்துகொண்டு மக்கள் அனைவரும் தங்களுக்கான தனிமையை கொஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

46
AR Rahman Divorce, Saira Bani Divorce

AR Rahman Divorce, Saira Bani Divorce

இந்த நிலையில் தான் மனைவியின் இந்த விவாகரத்து அறிக்கைக்கு பிறகு மன வேதனையோடு ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நாங்கள் 30 வயதை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம். நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாத்தை கடந்து செல்லும் போது உங்களது அன்புக்கும், எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

56
A. R. Rahman Movies, A. R. Rahman Emotional Note, AR Rahman Saira Banu

A. R. Rahman Movies, A. R. Rahman Emotional Note, AR Rahman Saira Banu

இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் ஏ ஆர் ரஹ்மானின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சாய்ரா பானு மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் வழக்கறிஞரை கலந்தாலோசித்த பிறகே இந்த விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த வருடத்தில் இசையமைப்பாளரும் நடிகரும், ஏ ஆர் ரஹ்மானின் உறவினருமான ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்தார்.

66
AR Rahman Divorce Reason, A. R. Rahman, A. R. Rahman Net Worth

AR Rahman Divorce Reason, A. R. Rahman, A. R. Rahman Net Worth

அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை பிரிவதாக அறிவித்தார். இப்படி ஒரே ஆண்டில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விவாகரத்து குறித்து அறிவிப்பது திருமண வாழ்க்கையில் கஷப்பான தருணங்களை சந்தித்து வரும் திருமண ஜோடிகளையும் விவாகரத்து செய்ய தூண்டுவதாக இந்த விவாகரத்து முடிவுகள் ஒரு எடுத்துக் காட்டாக அமைந்து வருகின்றன.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved