டூ வீலர் வாங்க கடன் வேணுமா? உடனடி லோன் கிடைக்க செய்யவேண்டியது இதுதான்!

First Published | Nov 20, 2024, 8:49 AM IST

முதல் முயற்சியிலேயே இரு சக்கர வாகனக் கடனுக்கு ஒப்புதல் பெறுவது பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் கனவை வேகமாக நிறைவேற்ற உதவியாக இருக்கும். தாமதமின்றி பைக் லோன் ஒப்புதல் பெறுவதற்கு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை என்னென்ன என்று இத்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.

Two-wheeler loan tips

முதல் முயற்சியிலேயே இரு சக்கர வாகனக் கடனுக்கு ஒப்புதல் பெறுவது பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்கும் கனவை வேகமாக நிறைவேற்ற உதவியாக இருக்கும். தாமதமின்றி பைக் லோன் ஒப்புதல் பெறுவதற்கு சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Credit score

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்கள் நம்பகத்தன்மையை நிரூபிக்கிறது. பெரும்பாலான கடன் வழங்குநர்கள் கடன் ஒப்புதல் அளிக்க 650 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் இருப்பதை விரும்புகிறார்கள். விண்ணப்பிக்கும் முன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.

Tap to resize

Necessary documents

அடையாளச் சான்று, முகவரிச் சான்று, வருமானச் சான்று மற்றும் சமீபத்திய பேங்க் ஸ்டேட்மெண்ட்கள் போன்ற தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் உள்ளதை உறுதிசெய்யவும். ஆவணங்கள் காணாமல் போனால் கடன் பெறவது தாமதமாகலாம். எனவே கடன் வழங்குநரிடமிருந்து தேவையான ஆவணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவை உங்களிட் இருப்பதை உறுதிசெய்யவும்.

Stable income

கடனளிப்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களுக்கு கடன் வழங்கத் முன்வருவார்கள். நிலையான வருமானம் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறன் இருக்கிறது என்பதற்கு உறுதி அளிக்கிறது. சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, நிலையான மாத வருமானம் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் சுயதொழில் செய்பவர்கள் வங்கி அறிக்கைகள் மூலம் நிலையான பணப்புழக்கத்தைக் காட்ட வேண்டும்.

Loan tenure

குறுகிய கடனைத் திரும்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுப்பது, கடன் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். குறுகிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒட்டுமொத்தமாக குறைந்த வட்டி செலுத்தவும் வழிவகுக்கிறது.

Debt-to-income ratio

நீங்கள் கூடுதல் கடனை நிர்வகிக்க முடியுமா என்பதைப் அறிய கடன்-வருமான விகிதம் மதிப்பீடு செய்யப்படும். உங்கள் மாதாந்திர கடன் பொறுப்புகள் வருமானத்தில் 40% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. விண்ணப்பிக்கும் முன் இந்த விகிதத்தை குறைக்க தேவைப்பட்டால், நிலுவையில் இருக்கும் மற்ற கடன்களை செலுத்தவும்.

Down payment

அதிக முன்பணம் கடன் தொகையைக் குறைக்கிறது. இதனால் கடன் ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உங்கள் கடன் விண்ணப்பத்திற்கு சீக்கிரம் ஒப்புதல் கிடைக்க, பைக்கின் விலையில் குறைந்தது 20-30% தொகையை முன்பணமாகச் செலுத்துவது நல்லது.

Co-applicant

உங்கள் வருமானம் அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், நிலையான வருமானம் அல்லது நல்ல கிரெடிட்டைக் கொண்ட ஒருவரை இணை விண்ணப்பதாரராகச் சேர்த்துக்கொண்டு விண்ணப்பிக்கலாம். இது கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Reputed lender

நன்கு அறியப்பட்ட கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது நீங்கள் ஏற்கெனவே பரிவர்த்தனைகள் செய்துவரும் வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம். சுமூகமான வங்கி பரிவர்த்தனை வரலாறு கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பெரும்பாலும் விரைவாக கடன் ஒப்புதல் வழங்கிவிடும்.

Bike Loan

முதல் முயற்சியிலேயே இருசக்கர வாகனக் கடனைப் பெறுவது, நல்ல கிரெடிட் ஸ்கோர், நிலையான வருமானம், கடன் பொறுப்புகள் மற்றும் தெளிவான விண்ணப்பம் ஆகியவற்றை பொறுத்தது என்று சுருக்கமாகச் சொல்லலாம். இந்த முறையில்  சரியான தயாரிப்புடன் விண்ணப்பித்தால், கடன் ஒப்புதல் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் புதிய டூவீலரை விரைவாக வாங்க முடியும்.

Latest Videos

click me!