ஒரு டீ கூட இவ்வளவு கம்மியா கிடைக்காது... வெறும் 7 ரூபாய் சேமித்தால் ரூ.5000 பென்ஷன்!

First Published | Nov 20, 2024, 7:50 AM IST

அடல் பென்ஷன் யோஜனா 2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 2024-25 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 56 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

Pension planning

ஒவ்வொருவரும் தங்கள் வருவாயில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, பாதுகாப்பாக இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். அதற்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது. சிலர் தங்கள் முதுமையை மனதில் வைத்து முதலீடு செய்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு முதலீட்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகையில் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் கணக்கு தொடங்கியுள்ளனர்.

Less than a cup of tea

அரசாங்கத்தின் அடல் பென்ஷன் யோஜனா, ஓய்வூதியத்திற்குப் பிறகு எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இல்லாமல் முதுமையை கழிப்பதற்கு உதவுகிறது. நீங்கள் இளைஞராக இருந்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் உங்கள் முதுமையை பொருளாதார ரீதியாக பலப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் ஒரு கப் டீயின் விலையை விட குறைவாக சேமிப்பதன் மூலம் மாதம்தோறும் 5000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.

Tap to resize

Pension scheme

அடல் பென்ஷன் யோஜனா மூலம் முதுமையை சுகமாக கழிப்பதற்கான பொருளாதார ஆதரவை உருவாக்கலாம். இந்தத் திட்டத்தில் உறுதியான பென்ஷனுக்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய தொகையைச் சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20 years investment

இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகி இன்னும் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயதானதும் ஓய்வூதியம் பெறலாம். உதாரணத்திற்கு, உங்கள் வயது 18 என்றால், ஒவ்வொரு மாதமும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது தினமும் 7 ரூபாய் மட்டும் சேமித்தால் போதும். 60 வயதுக்குப் பிறகு மாதம் 5000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம். 1,000 ரூபாய் ஓய்வூதியம் வேண்டுமானால் 18 வயதில் இருந்து மாதம் 42 ரூபாய் டெபாசிட் செய்தால் போதும்.

10,000 pension scheme

கணவன், மனைவி இருவரும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்வதன் மூலம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். 60 வயதுக்கு முன் கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும். கணவன்-மனைவி இருவரும் இறந்தால், நாமினி முழுப் பணத்தையும் பெறலாம்.

Atal Pension Yojana Tax Exemption

அடல் பென்ஷன் யோஜனா 2015-16 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் சேரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 2024-25 நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 56 லட்சம் புதியவர்கள் அடல் பென்ஷன் யோஜனாவில் இணைந்துள்ளனர்.

APY interest rate

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் மட்டுமின்றி பல நன்மைகளும் கிடைக்கும். ரூ.1.5 லட்சம் வரை வரியைச் சேமிக்கலாம். இந்த வரிச் சலுகை வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அல்லது வங்கிக்குச் சென்று இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

Latest Videos

click me!