மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுக்கு 12x30x12 ஃபார்முலா! ரூ.1000 முதல் ஆரம்பிக்கலாம்!

First Published | Nov 19, 2024, 2:51 PM IST

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் முதலீட்டாளர்களிடையே மிகவும் விருப்பமான தேர்வாக உருவெடுத்துள்ளன. இந்த சூழ்நிலையில், SIP முதலீடுகளில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் 12x30x12 ஃபார்முலா பயன்படுத்தினால் விரைவில் ஒரு கோடி ரூபாயை ஈட்டலாம்.

Mutual fund SIP

SIP திட்டம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான விருப்பமான தேர்வாக உள்ளமது. சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், இந்த திட்டம் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட குறைவான அபாயத்தை உள்ளடக்கியது. வெறும் 500 ரூபாயில் நீங்கள் SIP முதலீட்டைத் தொடங்கலாம். மேலும், நீண்ட கால முதலீடுகள் பெரிய லாபத்தை வழங்குகின்றன.

SIP investment

தனிநபர்கள் பெரிய போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகும் வாய்ப்பும் உள்ளது. ரூ.1,000 இல் இருந்து SIP திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் ஒரு கோடி ரூபாயைத் திரட்டலாம்.

Tap to resize

12X30X12 Formula

12X30X12 என்ற ஃபார்முலா நீங்கள் SIP இல் முதலீடு செய்து, கோடீஸ்வரராக ஆவதற்கு உதவும். உங்கள் முதலீடுகளுக்கு இந்த விதியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைப்பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம்.

12X30X12 Formula

இந்த SIP ஃபார்முலாவில் முதலீடு செய்யும் தொகையை வருடம் தோறும் 12% உயர்த்த வேண்டும். அதாவது நீங்கள் ரூ. 1,000 இல் SIP ஐத் தொடங்கினால், ஆண்டுதோறும் 12% முதலீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு 30 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு, 12% வருமானம் கிடைக்கும். 12 சதவீத டாப்-அப்பில் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் 12% வருமானம் ஈட்டலாம் என்பது இந்த 12x30x12 ஃபார்முலா.

SIP investment formula

இந்த விதியைப் பின்பற்றி ரூ. 1,000 முதலீடு செய்யத் தொடங்கினால், தொடர்ந்து ஒரு வருடத்திற்கு ரூ.1,000 மாதாந்திர டெபாசிட் செய்ய வேண்டும். அடுத்து, வரவிருக்கும் ஆண்டில் 12% முதலீட்டை உயர்த்த வேண்டும். அதாவது, 2வது ஆண்டில் 120 ரூபாய்க்கு கூடுதலாகச் சேர்த்து ரூ.1,120 இல் முதலீட்டைத் தொடர வேண்டும். இதேபோல 3வது ஆண்டுல் மேலும் 12% முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதன்படி 134 ரூபாய் உயர்த்தி, ரூ.1,254 தொடர்ந்து டெபாசிட் செய்ய வேண்டும்.

SIP investment to earn Rs 1 Crore

இந்த உத்தியை 30 வருடங்கள் பின்பற்றினால், உங்களின் மொத்த முதலீடு ரூ.28,95,992 ஆக இருக்கும். இதற்கு சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதம் என்று வைத்துக்கொண்டால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் பெறும் மூலதன ஆதாயம் ரூ.83,45,611 ஆக இருக்கும். இரண்டையும் சேர்த்தால், 30 வருட முடிவில் உங்கள் கார்பஸ் சுமார் ரூ.1,12,41,603 ஆக உயரும்.

Latest Videos

click me!