மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! விரைவில் சம்பளம் உயரப்போகிறது; எவ்வளவு தெரியுமா?

Published : Nov 19, 2024, 02:36 PM IST

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை நிர்ணயிக்கும் ஃபிட்மெண்ட் காரணி, 8வது ஊதியக் குழுவில் எவ்வாறு மாறக்கூடும் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! விரைவில் சம்பளம் உயரப்போகிறது; எவ்வளவு தெரியுமா?
8th Pay Commission

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அகவிலை நிவாரணம், ஓய்வூதியம் என பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கணக்கிட உதவும் முக்கிய காரணி தான் ஃபிட்மெண்ட் காரணி. தற்போது இருக்கும். 7வது ஊதியக் குழு 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியை பரிந்துரைத்தது. இதனால் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 7,000 லிருந்து ரூ. 17,990 ஆக அதிகரித்து.

25
8th Pay Commission

கடந்த சில நாட்களாகவே 8வது சம்பள கமிஷன் தொடர்பான விவாதம் அதிகரித்து வருகிறது. அதிலும் ஃபிட்மெண்ட் காரணி தொடர்பான பல செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கின்றன. தற்போது நிலவும் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கூட்டு ஆலோசனை இயந்திரங்கள் தேசிய கவுன்சில் (NC-JCM) செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா, தற்போது ஃபிட்மெண்ட் காரணியை அரசு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

35
8th Pay Commission

ஃபிட்மெண்ட் காரணி ஏன் முக்கியமானது?

பிட்மென்ட் காரணி என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை சரிசெய்வதற்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை காரணி ஆகும். தற்போது இருக்கும் 7வது ஊதியக் குழுவைப் பொறுத்தவரை, ஃபிட்மெண்ட் காரணி 2.57 என்ற அளவில் உள்ளது. ஆனால் தற்போது 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மென்ட் காரணியை 2.86 ஆக உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தி. அரசு ஊழியர்கலின் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 51,451 ஆக உயரும்.

45
8th Pay Commission

தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் ரூ. 17,990ஆக உள்ளது. ஆனால் குறைந்தபட்ச சம்பளம் ரூ. 34,000 முதல் ரூ.35,000 வரை இருக்கலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன.. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

55
8th Pay Commission

இதனிடையே 8வது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால் இந்த ஊதிய குழுவை அமைப்பது குறித்து இதுவரை அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் 2026-ம் ஆண்டுக்குள் 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மஅரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் 8-வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில் மத்திய அரசு விரைவில் இதுகுறித்து அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories