நம்முடைய வீடுகளில் மஞ்சள் பயன்படுத்தாத உணவுகள் வெகு குறைவு. இது உணவுகளுக்கு நிறமும் சுவையும் கொடுக்கும் திறன் கொண்டவை. பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது கூட ஆரோக்கியமானது தான். மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையானது. இதில் உள்ள கிருமிநாசினி பண்புகள் புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.
26
Wrong Food Combinations With Turmeric In Tamil
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பாலிஃபீனாலில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. குளிர்காலத்தில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது என சொல்லப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்கிறது. ஆனாலும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால் சில காய்கறிகளின் நிறமும், சுவையும் மாறுகிறது. மஞ்சளில் இருக்கும் நல்ல பண்புகள் நமக்கு அவசியம் என்றாலும் சில உணவுகளை சமைக்கும் போது மட்டும் மஞ்சள் சேர்க்கக்கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
36
Wrong Food Combinations With Turmeric In Tamil
கத்தரிக்காய்:
கத்தரிக்காய் சமைக்கும் போது மஞ்சள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மஞ்சள் சேர்க்கும் போது கத்தரிக்காயின் சுவை கசப்பாக மாறிவிடுகிறது.
46
Wrong Food Combinations With Turmeric In Tamil
கருப்பு மிளகு:
உப்பு, கருப்பு மிளகு சேர்த்து செய்யப்படும் உணவுகளில் ல் மஞ்சள் சேர்க்க வேண்டாம். இதனால் உங்களுடைய உணவின் சுவையே மாறிவிடும்.
வெந்தயம் போட்டு சமைக்கும்போது கூடவே மஞ்சள் சேர்ப்பதை தவிர்க்கவேண்டும். வெந்தயம் ஏற்கனவே சுவை கொடுக்கும் என்றாலும் அதனுடன் மஞ்சள் அதிகம் சேர்த்து சமைக்கும்போது இன்னும் சுவையை மோசமாக்கிவிடும் என கூறப்படுகிறது.
தேநீரில் மஞ்சளைச் சேர்ப்பது உடலில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் காணப்படும் குர்குமின், தேநீரில் உள்ள டானிக் அமிலம் ஆகிய இரண்டும் அமிலத்தன்மையை உண்டாக்கலாம். இதனால் ல் மலச்சிக்கல் உள்ளிட்ட இரைப்பை ஏற்படக் கூடும்.