சுரைக்காய் ஆரோக்கியமானது... ஆனா இந்த '5' உணவுகளுடன் மட்டும் மறந்தும் சாப்பிடாதீங்க!
Bottle Gourd Food Combinations : சுரைக்காய் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சிலவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். அவை என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
Bottle Gourd Food Combinations In Tamil
மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய மிகவும் மலிவான காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். சுரக்காயில் வைட்டமின்கள், கால்சியம் மெக்னீசியம், இரும்புச்சத்து துத்தநாகம், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாகவே உள்ளது. இவை அனைத்தும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சொல்லப்போனால் இதில் இருக்கும் சத்துக்கள் வேறு எந்த காய்கறிகளிலும் இல்லை.
Bottle Gourd Food Combinations In Tamil
சுரைக்காயில் கூட்டு குழம்பு சட்டினி தோசை என விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள் தோல் மற்றும் வளர்ச்சியை மாற்றத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், ஆயுர்வேதத்தின் படி, சுரைக்காயுடன் சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டால் அதனால் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவுக்கும். எனவே சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Bottle Gourd Food Combinations In Tamil
சுரைக்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாதவை:
முட்டைகோஸ் : முட்டைக்கோஸ் மற்றும் சுரைக்காய் இந்த ரெண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும். அதுபோல உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இரண்டையும் ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.
பிரக்கோலி : சுரைக்காயுடன் பிரக்கோலி சாப்பிடால், வாந்தி, மூக்கு ஒழுகுதல் மற்றும் தலை சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால்.. அடிக்குற வெயிலுக்கு உங்க கொழுப்பு வெண்ணெய் மாதிரி கரைஞ்சிடும்
Bottle Gourd Food Combinations In Tamil
புளிப்பு உணவுகள் : சுரைக்காயுடன் புளிப்பு உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறு சாப்பிட்டால் வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்றுவலி பிரச்சனை அதிகரிக்கும்.
பால் பொருட்கள் : சுரைக்காயுடன் பால் பொருட்கள் சேர்த்து சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும் இது உங்களுக்கு வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பீட்ரூட் : பீட்ரூட் மற்றும் சுரைக்காய் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் முகத்தில் வெடிப்புகளை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: தினமும் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிங்க! அப்புறம் பாருங்க என்ன நடக்குத்துன்னு
Bottle Gourd Food Combinations In Tamil
சுரைக்காயின் நன்மைகள் :
சுரைக்காய் சாறு குடித்தால் உடலில் வளர்ச்சிதை மாற்றமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது தவிர எடையையும் கட்டுக்குள் வைத்திருக்கும் மேலும் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பு:
ஆயுர்வேதத்தின்படி, சுரைக்காயுடன் மேலே சொன்ன பொருட்களை ஒரு போதும் சாப்பிடக்கூடாது இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல மீறி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமாக தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.