ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.! உடனே விண்ணப்பிங்க- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

First Published | Nov 20, 2024, 8:56 AM IST

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இந்தமாதம் இறுதிக்குள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

post graduate teacher

மாணவர்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் பங்கு

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் மாதா,பிதா, குரு என் வரிசைப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க ஆசிரியர்கள் தான் அச்சாரமாக திகழ்கிறார்கள். இதனிடையே தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த மாதம் இறுதிக்குள் 3000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ஆசிரியர்கள் வெளிநாடு சுற்றுலா

மேலும் நல்லாசிரியர்கள் விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு போட்டித்தேர்வு நடத்தி அதில் வெற்றிபெறும் ஆசிரியர்களை வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்து சென்றது. மேலும் டேராடூன் போன்ற பகுதிகளுக்கும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tap to resize

school teacher

 ஆசிரியர்களுக்கான விருது

இந்தநிலையில் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு விருதுக்கான சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  2024-2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துறைகள்

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், புவியியல், வேளாண் நடைமுறைகள்

விண்ணப்பிக்க அழைப்பு

அறிவியல் நகரத்தால் பத்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு காசோலையாகவும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது மேலும் 
விண்ணப்ப படிவம் www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையை பெற்றுக்கொண்டு, 23.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அறிவியல் நகர அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!