தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி.! மிஸ் பண்ணிடாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு

First Published | Nov 20, 2024, 7:43 AM IST

மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நெற் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தின் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நவம்பர் 30, 2024 வரை பதிவு செய்து பயனடையலாம்.

விவசாயமும் நாட்டின் வளர்ச்சியும்

விவசாயம் தான் நாட்டின் வாழ்வாதாரமாக உள்ளது. அந்த வகையில் விவசாயிகள் பயிர் நட்டால் தான் பொதுமக்களின் உணவு சாப்பிட முடியும். அந்த வகையில் விவசாயிகளின் தேவை நாட்டில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. விவசாயிகளுக்காக மானியத்தில் விதைகள், உரங்களையும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மழை, வெள்ளம், வெயில் போன்றவற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இழப்பீடு வழங்கி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
 

பயிர்களுக்கு காப்பீடு

இந்த திட்டத்தின் கீழ் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் நெற் பயிற்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு பதிவு செய்ய வேண்டிய காலக்கெடு கடந்த வாரம் முடிவடைந்துவிட்டது. இதனை நீட்டிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுப்பப்பட்டது. 

இது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம்பா, தாளடி/,பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை (15.11.2024) நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கைக்கிணங்க, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்,
 

Tap to resize

காப்பீடு காலக்கெடு நீட்டிப்பு

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 30.11.2024 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, சனி (23.11.2024) மற்றும் ஞாயிற்று கிழமையில் (24.11.2024) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை,

விவசாயிகளுக்கு தேதி குறித்த தமிழக அரசு

திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

Latest Videos

click me!