9 மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை.! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published : Nov 20, 2024, 07:07 AM ISTUpdated : Nov 20, 2024, 08:03 AM IST

தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்யும். அதே நேரத்தில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
9 மாவட்டங்களில் மிக கன மழை எச்சரிக்கை.! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதிய புயல் சின்னம்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில வராமாகவே மழையானது வெளுத்து வாங்கியது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது. அதே நேரத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் நவம்பர் 23ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காணமாக மீண்டும் பல இடங்களில் அடுத்த வாரம் முதல் கன மழை பெய்யவுள்ளது.
 

24

தமிழகத்தில் கன மழை

மேலும் இந்த காற்றழுந்ந தாய்வு பகுதி இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போது உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

34
heavy rain in tamilnadu

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதே போல தென்காசி, ராமநாதபுரம், திருவாரூர், காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்த, அந்த பகுதிகளில் உள்ள பாதிப்பை பொறுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

44
school holiday

மிக கன மழை எச்சரிக்கை

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  குளிர்ந்த இரவு நாளாக இருக்கப்போவதாக கூறியுள்ளார்.  அதே நேரத்தில்  நாகை, திருவாரூர், புதுக்கோட்டை கடற்கரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மிக கனமழை சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விருதுநகர், தேனி பகுதிகளிலும் கொஞ்சம் மழை பெய்யும் என கூறியுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  நவம்பர் 26 முதல் பரவலாக மழை பெய்யும் என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories