விரைவில் கர்ப்பம் ஆக வேண்டும் என்றால்.. எப்போது உடலுறவு கொள்ள வேண்டும்..?

First Published | Mar 8, 2023, 7:04 PM IST

கருத்தரிக்க விரும்புவோர் உடலுறவு கொள்ள சிறந்த நேரம்... எத்தனை முறை உறவு கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

tips to get pregnant soon in tamil

இந்திய தம்பதிகள் பகலில் வேலை செய்துவிட்டு இரவில் உறவு கொள்கிறார்கள். ஆனால் சில ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை பொறுத்தவரை அவை அதிகாலையில் தான் அதிகமாக இருக்குமாம். இரவில் நல்ல தூக்கம் காரணமாக கூட உறவு கொள்வது காலையில் நல்ல பயனளிக்கலாம். ஆனால் கருத்தரிக்க என்று வரும்போது... உடலுறவில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 

tips to get pregnant soon in tamil

பெரும்பாலும் இதற்கு காலை நேர உடலுறவு தான் ஏற்றது. இந்த நேரத்தில் ஆண்கள் பலரின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் நன்கு வேலை செய்யும். பெண்களின் இனப்பெருக்க ஹார்மோனும் ஆக்டிவாக இருக்கும். பாலுணர்வை இவை தூண்டும். ஆனால் பெண்களுக்கு கரு தங்க எல்லா நாட்களும் சாதகமாக அமையாது. இதில் பெண்களின் கருப்பை , அண்டவிடுப்பு, மாதவிடாய் போன்ற காரணிகளையும் கவனிக்க வேண்டும். வெறும் உடலுறவு இதை சாத்தியமாக்காது. 

Tap to resize

கருவுற வேண்டும் என்றால் கருப்பை சாதகமாக இருக்க வேண்டும். மாதவிடாய் முடிந்த கடைசி நாள் முதல் அடுத்த மாதவிடாய் சுழற்சி வரையிலும் கருத்தரிக்க ஏற்ற காலம் தான். குறிப்பாக, மாதவிடாய் வந்த பிறகு 14 ஆம் நாளில் கருமுட்டை வெளிவரும். 

இதையும் படிங்க: என் நண்பனை கல்யாணம் பண்ணி.. ஆனா இப்போ வரைக்கும் அவன் மேல லவ் வரல.. விட்டுட்டு போக தோனுது! வாசகிக்கு பதில்

இந்த கருமுட்டையின் ஆயுள் காலத்தை பொறுத்தவரை 24 மணி நேரம் ஆக்டிவாக இருக்கும். இருப்பினும் நல்ல வீரியம் கொண்டிருப்பது வெறும் 15 மணி நேரம் தான். அப்போது உடலுறவு வைத்து கொண்டால் ஆண்களின் சக்திவாய்ந்த விந்தணுக்கள் அந்த கருமுட்டையுடன் சேர்ந்து கருத்தரிக்கும். இப்போது அண்டவிடுப்பு நாட்களை துல்லியமாக கணக்கிடும் சில ஆப்ஸ் வந்துவிட்டன. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். 

ஆயுர்வேதத்தின்படி ஒரு நபர் உடலுறவுக்கான சிறந்த நேரத்தை புரிந்து கொள்ள அவருடைய உடலமைப்பையும் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது வாதம், பித்தம், கபம் ஆகியவை மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு கொள்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். வாதம் இருக்கும் நபர்கள் அதிகாலை உடலுறவு வைக்கலாம். பித்தம் இருப்பவர்கள் மாலையில் உறவு வைத்தால் நன்கு இயங்குவார்களாம். கபம் உள்ளவர்களும் மாலை அல்லது காலை உறவு கொள்ளலாம். இந்த சமயங்களில் இவர்களின் பாலியல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

உங்களுக்கு மாதவிடாய் முடிந்த பிறகு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உடலுறவு கொள்ளலாம். இதனால் கருத்திருக்கும் வாய்ப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: ஆணுறுப்பு இந்த சைஸ்-ல இருந்தால்.. தாம்பத்தியத்தில் ஒரு பிரச்சனையும் வராது.. இந்த டெக்னிக் தெரிஞ்சுக்கோங்க..!

Latest Videos

vuukle one pixel image
click me!