KS Ravikumar not allow his daughters Entered Into Cinema
KS Ravikumar not allow his daughters Entered Into Cinema : இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி கணேசனை வைத்து படையப்பா படத்தை கொடுத்தவர். அதே போன்று சரத்குமார், விஜயகுமார் மற்றும் மனோரமாவை வைத்து நாட்டாமை படத்தை இயக்கினார். ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், கமல் ஹாசனின் அவ்வை சண்முகி படத்தை தந்தார்.
மேலும், கமல் ஹாசனை 10 கதாபாத்திரங்களில் நடிக்க வைத்தவர். இப்படி இவரது புகழை சொல்லிக் கொண்டே போகலாம். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வந்த நாட்டாமை, முத்து, அவ்வை சண்முகி, படையப்பா, தசவதாரம் என்று சூப்பரான படங்களை இயக்கினார். இப்போது படங்கள் இயக்குவதைக் காட்டிலும் சினிமாவில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
Director KS Ravikumar Daughter
இயக்குநர், நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கேஎஸ் ரவிக்குமாரை இயக்குநராக அறிமுகமாகும் வாய்ப்பை கொடுத்தது ஆர்பி சௌத்ரி தான். இவரது தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வந்த புது வசந்தம் கொடுத்த சக்ஸஸுக்கு பிறகு தான் ரவிக்குமாருக்கு இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்தது. கேஎஸ் ரவிக்குமாரின் முதல் படம் புரியாத புதிர். இந்தப் படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், சித்தாரா, ரேகா, ஆனந்த் பாபு சேரன் (சிறப்பு தோற்றம்), கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
KS Ravikumar Daughters, Janani, Maalica, Jaswanthi
அதன் பிறகு வரிசையாக பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் இவரது படங்களில் இவர் நடிக்கவும் செய்திருப்பார். கேஎஸ் ரவிக்குமார் கற்பகம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜனனி, ஜஸ்வந்தி மற்றும் மாலிகா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். மூவருமே இப்போது படித்து முடித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். இதில், மாலிகா லைஃப் கோச்சிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
KS Ravikumar Family Details
ஜனனி பிட்னஸ் ஆர்வலராக இருக்கிறார். அதோடு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். ஜஸ்வந்தி ஒரு மருத்துவர். அர்மோரா என்ற டெர்மடாலஜி என்ற கிளினிக் வைத்திருக்கிறார். இவருடைய கணவர் ஆனந்த் கூட ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த் நிலையில் தான் ஒரு சினிமா இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக இருந்து கொண்டு தன்னுடைய 3 மகள்களையும் சினிமா பக்கமே வரவிடாமல் செய்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று தெரியாத போதிலும் எங்களை சினிமா பக்கமே வரக்கூடாது என்று சொல்லி சொல்லி தான் எங்களை அப்பா வளர்த்தாங்க என்று கேஎஸ் ரவிக்குமாரின் 3 மகள்களும் கூறியிருக்கிறார்கள்.
KS Ravikumar Daughters
பொதுவாக அப்பா நடிகரோ, இயக்குநராகவோ இருந்தால் மகனை அல்லது மகளை நடிக்க வைத்துவிடுவார்கள். அப்படி தான் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால், நம்ம தளபதி விஜய், அதிதி ஷங்கர் ஆகியோரை சொல்லலாமே. ஆனால், சினிமாவே வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்களின் பட்டியலில் இயக்குநர் பொன்வண்ணன் மற்றும் கேஎஸ் ரவிக்குமாரை சொல்லலாம்.