Rajinikanth visited Vijay while Vijay was shooting for Bagavathi
Rajinikanth visited Vijay while Vijay was shooting for Bagavathi : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்து அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டவர் விஜய். அதோடு ரஜினிக்கு பிறகு அதிகமான மாஸ் எல்லாம் விஜய்க்கு தான் இருக்கிறது. இது விஜய்க்கான காலம். அதான் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்று ரஜினிகாந்த் கூட ஒரு நிகழ்ச்சியில் கூடியிருந்தார். அதற்கு சிவாஜினியின் பெயரை சொல்லி ஒரு உதாரணத்தையும் கூறியிருந்தார்.
Rajinikanth visited Vijay while Vijay was shooting for Bagavathi
அப்படிப்பட்ட ரஜினிகாந்த் பாபா பட ஷூட்டிங்கின் போது விஜய்யை பார்க்க ஓடோடி வந்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பொதுவாக சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரே இடத்தில் 2 படங்களின் ஷூட்டிங் நடைபெற்றால் அந்த படங்களில் ஹீரோக்கள் ஒருவரையொருவர் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி விஜய் மற்றும் அஜித் இருவரும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
Rajinikanth visited Vijay while Vijay was shooting for Bagavathi
இதே போன்று தான் ரஜினிகாந்த் மற்றும் விஜய். இருவரும் படப்பிடிப்பின் போது ஒருவரையொருவர் சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அது என்ன படம் என்றால் விஜய்யின் பகவதி மற்றும் ரஜினியின் பாபா ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போது தான் ரஜினிகாந்த் விஜய்யை பார்க்க வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
Rajinikanth was shooting for Baba
இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் தான் பகவத். இந்தப் படத்தின் முதல்வர் கான்வாய் வரும் போது பிரசவத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் பெண் வரும் ஆட்டோவை போலீஸையும் மீறி விஜய் எதிரில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சீன் தான் அப்போது படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் தான் ரஜினியின் பாபா பட ஷூட்டிங்கும் நடைபெற்று கொண்டிருந்தது. இது குறித்து அறிந்த விஜய், நான் சென்று ரஜினியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், இயக்கநரோ இந்த சீன் முடிந்த பிறகு வேறொரு இடத்திற்கு ஷூட்டிங் மாற்றப்படும். அந்த கேப்பில் நீங்கள் சென்று ரஜினியை பார்த்துவிட்டு வாருங்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.
Rajinikanth visited Vijay while Vijay was shooting for Bagavathi
அப்போது ரஜினியே நேரில் வந்துள்ளார். சற்றும் எதிர்பார்க்காத விஜய் மற்றும் இயக்குநர், ரீமாசென் ஆகியோர் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரஜினி வருவதற்கு முன்பு வரை விஜய் தன்னுடைய கழுத்தில் துண்டு அணிந்திருந்தார். ரஜினியை பார்த்த பிறகு கழுத்தில் அணிந்திருந்த துண்டை விஜய் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டார். அதனை பார்க்கும் போது தனக்கு பெருமையாக இருந்தது.
இப்படியொரு மரியாதையா என்று எண்ணும் போது தனக்கே ஆச்சரியமாக இருந்ததாக இயக்குநர் வெங்கடேஷ் கூறியிருக்கிறார். விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சிறுவனாக நடித்திருக்கிறார். அதோடு, எஸ் ஏ சியும் இந்தப் படத்தில் முக்கியமான காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.