Ramya Pandian Christmas Celebration
டம்மி டப்பாசு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இதையடுத்து ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்த இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது அவரின் மொட்டை மாடி போட்டோஷூட் தான். அந்த போட்டோஷூட்டால் ஒரே நாளில் பேமஸ் ஆகிவிட்டார் ரம்யா.
Ramya Pandian, Lovel Dhawan
ரம்யா பாண்டியனால் மொட்டைமாடி போட்டோஷூட் டிரெண்டும் ஆனது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர், அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார். அந்நிகழ்ச்சியில் பைனல் வரை சென்றார் ரம்யா.
Ramya Pandian Latest Photos
குக் வித் கோமாளி முடிந்த கையோடு, ரம்யா பாண்டியனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அதை ஏற்று பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி சிம்பு தொகுத்து வழங்கிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக வந்த ரம்யா, டைட்டில் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் நழுவ விட்டார்.
Ramya Pandian Romantic Photo
இதையடுத்து யோகா பயிற்சியில் இறங்கிய ரம்யா, ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் தங்கி பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றும் லோவெல் தவான் மீது காதல் ஏற்பட்டுள்ளது. சில மாதங்கள் இருவரும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
Ramya Pandian Lover Lovel Dhawan
ரிஷிகேஷில் கங்கை நதிக்கரை ஓரம் நடைபெற்ற ரம்யா பாண்டியன் - லோவெல் தவான் திருமணத்தில் உறவினர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
Ramya Pandian Husband
திருமணம் முடிந்த கையோடு, தன் காதல் கணவருடன் தாய்லாந்துக்கு ஹனிமுன் சென்ற ரம்யா பாண்டியன், அங்கு தன் கணவருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ரம்யா.