சைலண்டா திரைக்கு வந்த சித்தார்த்தின் மிஸ் யூ படம் பற்றி தெரியுமா – 7 நாட்களில் 3 கோடி வசூல்!

First Published | Dec 25, 2024, 10:19 AM IST

Siddharth Miss You Movie is Not Hit In Theatre : சைலண்டா திரைக்கு வந்த சித்தார்த்தின் மிஸ் யூ படமானது குறைவான வசூல் செய்த படம் என்ற விமர்சனத்தை பெற்று வருகிறது.

Pushpa 2 Box Office Collection

Siddharth Miss You Movie is Not Hit In Theatre : தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக வேற்று மொழி படங்களுக்கு மட்டுமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதற்கு புஷ்பா 2 படமே ஒரு உதாரணம். மோசமான படத்திற்கு ஒரு உதாரணம் சூர்யாவின் கங்குவா. புஷ்பா 2 படம் வெளியாவதற்கு முன்னதாக தமிழ் சினிமாவி அமரன், பிரதர், பிளடி பெக்கர் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த படங்களுக்கு மட்டுமே வசூல் மற்றும் விமர்சனம் ரெண்டிலும் நல்ல வரவேற்பு.

Siddharth Miss You Movie

மற்ற படங்களுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கல. அதன் பிறகு தான் சூர்யாவின் கங்குவா திரைக்கு வந்தது. இந்தப் படமும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அமரனுக்கு மட்டுமே தியேட்டர் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தது. இந்த நிலையில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட, அதிகளவில் பேசப்பட்ட அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் திரைக்கு வந்தது. அதிரடி ஆக்‌ஷனுக்கு பெயர் போன புஷ்பா 2 வசூல் ரீதியாக சாதனை மேல் சாதனை படைத்தது. தமிழகத்திலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு.

Tap to resize

Miss You December 13 Release

உலகளவில் ரூ.1500 கோடிக்கும் அதிமாக வசூல் அள்ளியுள்ளது. இப்போது விடுதலை பார்ட் 2 படம் வெளியாகி மெதுவாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 20ஆம் தேதி திரைக்கு வந்த விடுதலை பார்ட் 2 படமானது இந்தியா முழுவதும் 5 நாட்களில் ரூ.27.40 கோடி வசூல் குவித்திருக்கிறது. இப்படி புஷ்பா 2 மற்றும் விடுதலை 2 படங்கள் மாறி மாறி வசூல் குவித்து வரும் நிலையில் இந்த 2 படங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் திரைக்கு வந்த சித்தார்த்தின் மிஸ் யூ படமானது மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை அந்தளவிற்கு கவரவில்லை. இதனால் தான் என்னவோ படத்தின் வசூல் ரொம்பவே குறைவு தான். அதோடு படத்தைப் பற்றி அந்தளவிற்கு பேச்சு இல்லை.

Miss You Box Office Collection

இயக்குநர் ராஜசேகர் என் இயக்கத்தில் சித்தார்த், ஆசிகா ரங்காநதன், பால சரவணன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி Miss You படம் திரைக்கு வந்தது. மெதுவாக செல்ல கூடிய இந்தப் படமான ரசிகர்களுக்கு போர் அடிக்கிறது. என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கிறது. இதனால், இந்தப் படம் ஆடியன்ஸை ஈர்க்கவில்லை. வசூலும் பெரியளவு ஒன்னுமே இல்லை. படம் வெளியாகி 7 நாட்களில் மொத்தமாக ரூ.3.85 கோடி தான் வசூல் குவித்திருக்கிறது.

Viduthalai 2

சமீபகாலமாக சித்தார்த் நடிக்கும் எந்தப் படமும் பெரியளவில் ஓடுவதில்லை. டக்கர், சித்தா, இந்தியன் 3, மிஸ் யு ஆகிய படங்களை உதாரணத்திற்கு சொல்லலாம். இப்போது கைவசம் டெஸ்ட், இந்தியன் 3, சித்தார்த் 40 ஆகிய படங்களை வைத்திருக்கிறார். இந்தப் படங்கள் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Latest Videos

click me!