Ajith Attend PV Sindhu Wedding Reception : ஐதராபாத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். அவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24
Ajithkumar Latest Photos
அஜித் கைவசம் உள்ள மற்றொரு படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஐதராபாத்தில் குட் பேட் அக்லி ஷூட்டிங் முடிந்த கையோடு நடிகர் அஜித் அங்கு நடைபெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த விழாவில் அஜித் தன் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா உடன் வந்து கலந்துகொண்டார். குடும்பத்துடன் மேடையேறி மணமக்களை வாழ்த்திய அஜித் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
44
Ajithkumar Family Photo
நடிகர் அஜித் அடுத்த மாதம் ஐரோப்பாவில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதால், அதற்காக கடந்த மாதம் முழுக்க துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதுமட்டுமின்றி கார் பந்தயத்திற்காக தன் உடல் எடையையும் கணிசமாக குறைத்து அஜித், ஸ்லிம் லுக்கில் பேமிலியோடு வந்து பிவி சிந்து திருமண வரவேற்பில் கலந்துகொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கோட் சூட்டில் அஜித் ஜேம்ஸ் பாண்ட் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.