பொதுவாக நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பெண்கள், 30 புடவை வைத்திருந்தாலே வீட்டில் இருக்கும் ஆண்கள் 300 புடவையை வாங்கி அடுக்கியது போல் பேசுவார்கள். இதை கேட்கும் பெண்களும் நாம் தான் அதிகமாக புடவை வைத்துளோம் எங்கிற எண்ணம் தோன்றும். ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் விதமாக, ஒரு நாளைக்கு ஒரு புடவை, கட்டிய புடவையை திரும்பி கட்டவே மாட்டேன் என சொல்லி நடிகை நளினி கூறியுள்ளது தான் செம்ம ஹைலைட்.
27
Saree Debate Shows
சில பிரபலங்கள் மற்றும் பெண்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, ஐந்தாயிரம் புடவை வைத்திருக்கிறேன், மாதம் தோறும் 5 புடவை எடுப்பேம், பத்து புடவை எடுப்போம் என கூறுபவர்கையே மிஞ்சிவிட்டார் என்பதே நளினி சொன்னதை கேட்ட பலரின் கருத்து.
கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான 'ஒத்தையடி பாதையிலே' என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நளினி. ஆனால் இந்த படத்தில் நளினி ஹீரோயினாக நடிக்கவில்லை. இதை தொடர்ந்து வெளியான ராணுவ வீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . பின்னர் ஓம் சக்தி, உதிர் உள்ளவரை உஷா, சரணாலயம், மனைவி சொல்லே மந்திரம், போன்ற படங்களில் தான் கதாநாயகியாக நடித்தார்.
47
Nalini and Ramarajan Divorce
தன்னுடைய படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய, நடிகர் ராமராஜனை காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நளினி, பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். நளினி - ராமராஜன் தம்பதிகளுக்கு அருணா - அருண் என இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் ராமராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நளினி அவரை விவாகரத்து செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டார்.
இருவரும் பிரிந்து விட்டாலும் தற்போது வரை ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் மற்றும் நட்பு மிகவும் உகந்தது என்பதை பல பேட்டிகளில் நளினி கூறியுள்ளார். அதேபோல் இப்போது வரை தன்னுடைய கணவர் ராமராஜனை காதலிப்பதாகவும் சொல்வார்.
67
Nalini Acting Malli And Ninaithen Vandhai Serial
எந்த ஒரு ஒளிவு மறைவு இன்றி, வெகுளித்தனமாக பேசும் நடிகை நளினி அவ்வவ்போது சில திரைப்படங்களில் நடித்தாலும், சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியலிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தினமும் புது புடவை மட்டுமே கட்டுவேன் என நளினி தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூட புது புடவை கட்டாமல் இருக்க மாட்டேன். அதேபோல் ஒரு புடவை கட்டி விட்டால் மீண்டும் அந்த புடவையை கட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய கட்டிய புடவைகளை வைப்பதற்கு என்றே தனி வீடு ஒன்றும் உள்ளது என கூறியுள்ள நளினி, என் பிள்ளைகளும் உங்களுக்கு புடவை இருக்கிறதா? அல்லது எடுத்துக் கொடுக்கட்டுமா என அடிக்கடி கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.