MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!

தீபக் குடும்பத்தை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது யார் தெரியுமா? பாச மழையில் நனைந்து போட்டியாளர்!

'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் தற்போது துவங்கி உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது மஞ்சரியின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுத்துள்ளனர். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 24 2024, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Freeze Task started in Bigg Boss 8

Freeze Task started in Bigg Boss 8

ஒவ்வொரு வருடமும் 100 நாட்களை டார்கெட் செய்து நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு, எத்தனையோ கடுமையான டாஸ்க்களை பிக் பாஸ் கொடுத்தாலும், போட்டியாளர்களின் அனைத்து வலி வேதனைகளையும் மறக்க செய்யும் டாக்ஸ் தான் ஃபிரீஸ் டாஸ்க்.
 

26
Manjari narayanan Family enter in Bigg Boss

Manjari narayanan Family enter in Bigg Boss

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டும் போது தான், இந்த டாஸ்க் நடத்தப்படும். பல மாதங்களாக  தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு குணங்கள் கொண்ட போட்டியாளர்களுடன் விளையாடி வரும் பிரபலங்கள், அவர்களுடைய குடும்பத்தை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அன்ஷிதா 4 மாத கர்ப்பமா? ரயான் கேள்விக்கு இப்படி பளீச்சுனு சொல்லிட்டாங்களே - என்னப்பா நடக்குது பிக்பாஸ்?

36
Manaji share the Mother's love

Manaji share the Mother's love

இது போன்ற ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தை உள்ளடக்கியது தான் பிக்பாஸ் ஃபிரீஸ் டாஸ்க். இந்த வாரம் முதல் துவங்கியுள்ள இந்த டாஸ்கில், தீபக்கின் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் மகன் உள்ளே வந்தனர். பின்னர் போட்டியாளர்களை பற்றிய தனது கருத்துக்களை தீபக் மனைவி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக எந்த போட்டியாளரிடம் உங்களுக்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என பிக்பாஸ் கேட்டபோது அருண் பிரசாத் என கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்து அசத்தினார்.

46
Manjari Son Cuteness Overload

Manjari Son Cuteness Overload

தீபக் குடும்பத்தை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் உள்ளே தற்போது மஞ்சரியின் குடும்பத்தினர் தான் வந்துள்ளனர். மஞ்சரி தன்னுடைய கணவரிடம் இருந்து திருமணமான ஓரிரு வருடத்திலேயே பிரிந்த நிலையில், இவரின் 5 வயது மகனை இவர் தான் சிங்கிள் மதராக இருந்து வளர்த்து வருகிறார்.

'விடுதலை 2' ஓடிடியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!

56
Manjari Family Emotional Moment

Manjari Family Emotional Moment

தற்போது மஞ்சரியின் அம்மா, மகன் மற்றும் உறவினர்கள் என நான்கு பேர் வந்துள்ளனர். மஞ்சரியை பார்த்ததும் அவரின் அம்மா கட்டிப்பிடித்து அழுது தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய நிலையில், மஞ்சரி தன்னுடைய மகனுடன் பல நாட்கள் கழிந்து ஓடி விளையாடியுள்ளார்.

66
Happy Moments in Bigg Boss

Happy Moments in Bigg Boss

மேலும் தனக்கு பிக்பாசில் இருந்து வழங்கப்பட்ட டம்மி டைட்டிலை அவரிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் கண்ணீர் விட்டபடி எமோஷனலாக பேசியுள்ளார். இறுதியில் போட்டியாளர்கள் அனைவரும் மஞ்சரியின் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது.

தோளுக்கு மேல் வளர்ந்த மகன்; ஹீரோயின் போல் ஜொலிக்கும் மகள்! வைரலாகும் சூர்யாவின் பேமிலி போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved