Kayal Serial
சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட சீரியல் கயல். தற்போது நான்கு வருடங்களை எட்டி உள்ள இந்த தொடரை, பி செல்வம் என்பவர் இயக்கி வருகிறார்.
Karthik Sanjeev is Hero
இதைத்தொடர்ந்து தான் சன் டிவியில், துவங்கப்பட்ட 'கயல்' தொடரில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சைத்ரா ரெட்டி, இல்லத்தரசிகள் மத்தியிலும் 'கயல்' கதாபாத்திரமாகவே பார்க்கப்படுகிறார். இந்த தொடரில் 'ராஜா ராணி' சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
Kayal Serial TRP Rating
இந்த சீரியல் துவங்கப்பட்டதில் இருந்தே, தொடர்ந்து டாப் 3 டிஆர்பி பட்டியலை கைப்பற்றி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த கயல் - எழில் திருமணம் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதே நேரம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், தற்போது சரவண வேல் என்கிற கதாபாத்திரம் மூலம் கயலுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விஜய் விஷ்வா நடித்த வருகிறார். இது ஒரு கேமியோ ரோலாக இடம் பெற்றுள்ளது.
Kayal Serial Cameo Role
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர், தற்போது நான்கு வருடங்களை எட்டியுள்ள நிலையில் இன்று 1000-வது எபிசோடு ஒளிபரப்பாகி உள்ளது. சமீப காலமாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள், 500 எபிசோடுகளை எட்டுவதே சவாலாக உள்ளது. அப்படியே எட்டினாலும், அந்த சீரியல்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பை கடைசிவரை கிடைக்கிறதா? என்பது சந்தேகமே.
'விடுதலை 2' ஓடிடியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்!
Kayal serial 1000 Episode
ஆனால் 'கயல்' சீரியல் துவங்கப்பட்ட நாளில் இருந்தே, தற்போது வரை தொடர்ந்து டிஆர்பியில் டாப் ரேங்கிங்கில் உள்ளது. மேலும் ஆயிரம் ஆவது நாள் எபிசோடை கயல் சீரியல் குழுவினர் தங்களுடைய செட்டில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த தகவலை அறிந்து, ரசிகர்களும் கயல் சீரியல் படைத்த சாதனைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.