Published : Dec 24, 2024, 02:04 PM ISTUpdated : Dec 24, 2024, 02:10 PM IST
'பிக் பாஸ் சீசன் 8' நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஃபிரீஸ் டாஸ்க் தற்போது துவங்கி உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது மஞ்சரியின் குடும்பத்தினர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் 100 நாட்களை டார்கெட் செய்து நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு, எத்தனையோ கடுமையான டாஸ்க்களை பிக் பாஸ் கொடுத்தாலும், போட்டியாளர்களின் அனைத்து வலி வேதனைகளையும் மறக்க செய்யும் டாக்ஸ் தான் ஃபிரீஸ் டாஸ்க்.
26
Manjari narayanan Family enter in Bigg Boss
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டும் போது தான், இந்த டாஸ்க் நடத்தப்படும். பல மாதங்களாக தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பிரிந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு குணங்கள் கொண்ட போட்டியாளர்களுடன் விளையாடி வரும் பிரபலங்கள், அவர்களுடைய குடும்பத்தை பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இது போன்ற ஒரு உணர்வுபூர்வமான விஷயத்தை உள்ளடக்கியது தான் பிக்பாஸ் ஃபிரீஸ் டாஸ்க். இந்த வாரம் முதல் துவங்கியுள்ள இந்த டாஸ்கில், தீபக்கின் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் மகன் உள்ளே வந்தனர். பின்னர் போட்டியாளர்களை பற்றிய தனது கருத்துக்களை தீபக் மனைவி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக எந்த போட்டியாளரிடம் உங்களுக்கு கருத்து முரண்பாடு இருக்கிறது என பிக்பாஸ் கேட்டபோது அருண் பிரசாத் என கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்து அசத்தினார்.
46
Manjari Son Cuteness Overload
தீபக் குடும்பத்தை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் உள்ளே தற்போது மஞ்சரியின் குடும்பத்தினர் தான் வந்துள்ளனர். மஞ்சரி தன்னுடைய கணவரிடம் இருந்து திருமணமான ஓரிரு வருடத்திலேயே பிரிந்த நிலையில், இவரின் 5 வயது மகனை இவர் தான் சிங்கிள் மதராக இருந்து வளர்த்து வருகிறார்.
தற்போது மஞ்சரியின் அம்மா, மகன் மற்றும் உறவினர்கள் என நான்கு பேர் வந்துள்ளனர். மஞ்சரியை பார்த்ததும் அவரின் அம்மா கட்டிப்பிடித்து அழுது தன்னுடைய அன்பை வெளிப்படுத்திய நிலையில், மஞ்சரி தன்னுடைய மகனுடன் பல நாட்கள் கழிந்து ஓடி விளையாடியுள்ளார்.
66
Happy Moments in Bigg Boss
மேலும் தனக்கு பிக்பாசில் இருந்து வழங்கப்பட்ட டம்மி டைட்டிலை அவரிடம் காட்டி மகிழ்ந்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் கண்ணீர் விட்டபடி எமோஷனலாக பேசியுள்ளார். இறுதியில் போட்டியாளர்கள் அனைவரும் மஞ்சரியின் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுகுறித்த புரோமோ வெளியாகியுள்ளது.